Welcome..! Join us to Develop your Humanity
கங்கை நதியை தூய்மைப் படுத்துவதற்கான தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட விகாஸ் சந்திராவின் வாழ்க்கை கதை
கங்கையில் வரும் அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்வது முதல் செயல்படாத கழிவுநீர்க் கால்வாய்களை சீரமைப்பது வரையிலான செயல்பாடுகளுக்கு தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட விகாஸ் சந்திரா என்கின்ற குட்டு பாபா வின் வாழ்க்கை கதை இது
கோடிக்கணக்கான மக்கள் கங்கையை அன்னையாக வழிபடுகின்றனர் எனவே நாம் கங்கை நதியின் புனிதத்தை காக்க வேண்டும் என அழுத்தந்திருத்தமாக வலியுறுத்துகிறார் சந்திரா
சந்திராவின் வாழ்க்கை லட்சியம் 1998 ஆம் ஆண்டில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தில் துவங்குகிறது
ஒரு நடுத்தர வயது மனிதர் கழிவுநீர் கலந்த கங்கையில் ஓரத்தில் நீராடிக் கொண்டிருக்கிறார் என்ன செய்கிறார் என கேட்டபோது தனது மனைவியின் இறுதிச் சடங்குகளை நடத்தி கொண்டிருப்பதாகவும் தூய்மையான கங்கையின் பகுதிக்கு படகில் செல்ல தன்னிடம் பணம் இல்லை என்று தன்னிடம் கூறியதையும் நினைவு கூறுகிறார்
தனக்கு நான்கு வயதாக இருக்கின்ற போது தனது தாயை இழந்தார் விகாஸ் சந்திரா அதன்பிறகு பூமாதேவியை தனது தாயாகவும் கங்கையின் புனித பணிக்கு என தனது வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டார் விகாஸ் சந்திரா. தூய்மையற்ற புனிதம் கெட்ட நிலையில் கங்கையை பார்ப்பதை அவரால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை எனவே அவரது போராட்டம் கங்கா பச்சாவோ அந்தோலன் என்ற அமைப்பின் மூலம் 2000மாவது ஆண்டில் துவங்கியது அமைப்பின் நோக்கம் கழிவுநீராலும் பிணங்களாலும் சீரழிந்து கொண்டிருக்கும் கங்கை நதியை நோக்கி அரசாங்கத்தின் பார்வையைத் திருப்புவது ஆகும்
48 மணி நேர தொடர் உண்ணாவிரத போராட்டம் ஒன்றை நடத்தினார். பிறகு அவர் பலப்பல போராட்டங்களையும் ஊர்வலங்களையும் கங்கை நதிக்காக ஒருங்கிணைத்தார். பின்னர் 2000 ஆவது ஆண்டு ஜூலை மாதத்தில் அவர் கங்கை நதியின் சீரழிந்த நிலைமைக்கு மாநில மத்திய அரசுகள் பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற பொதுநல மனு ஒன்றை பாட்னா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள பாட்னா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அருகில் நூற்றுக்கணக்கான அனாதைப் பிணங்கள் கிடந்ததை கண்டதும் அவரது போராட்டம் மேலும் வலுப்பெற்றது. அவை தக்க முறையில் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்தார். பாட்னா மருத்துவக்கல்லூரி தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தது. மருத்துவமனைக்கு அருகில் கிடக்கும் பிணங்கள் நதியின் வேறு பகுதியில் இருந்து மிதந்து வருவதாக கூறியது ஆனால் அந்த பிணங்களில் போஸ்ட்மார்ட்டம் செய்ததற்கான தெளிவான அடையாளங்கள் தென்பட்டன. எனவே பிணங்கள் தக்க மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என தொடர்ந்து போராடினார். போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டு நதிக்கரையில் கிடந்த பிணங்களின் புகைப்படங்களை எடுத்துக்கொண்டு நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களை இணைத்துக்கொண்டு தெருத்தெருவாக சென்றார் அரசு அவற்றை நல்ல முறையில் அடக்கம் செய்ய வேண்டும் என்றார். அவரது முயற்சிகள் பலன் அளித்தன மார்ச் 2001 ல் அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்வது மாநில அரசாங்கத்தின் பொறுப்பு என பாட்னா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பாட்னா மருத்துவ கல்லூரி பிணங்களை நல்லடக்கம் செய்வதற்காக 300 ரூபாய் தருவதாக ஒத்துக் கொண்டது பிறகு அது 2007ஆம் ஆண்டு ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது பின்னர் ரோகி கல்யாண் சமிதி என்கின்ற அரசாங்க அமைப்பு அனாதைப் பிணங்களை நல்லடக்கம் செய்வதற்கான தொகையை தருவதாக ஒத்துக்கொண்டது
இதுவரை கங்கை நதியின் தூய்மைக்காக 38 பொதுநல வழக்குகளை தொடுத்துள்ளார் மருத்துவமனை கழிவுகள் கங்கையில் கலப்பதற்கு எதிராகவும் சந்திரா போராடினார் தற்போது பாட்னா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகில் மருத்துவ கழிவுகளை சுத்திகரிப்பதற்காக இன்ஸினேரட்டர் கருவி பொருத்தப்பட்டுள்ளது
இன்று அவர் தனிமனிதராக இல்லை அவர் பின்னால் நூற்றுக்கணக்கான இராணுவம் போன்ற தன்னார்வலர்கள் உள்ளனர் அவர்கள் சுழற்சி அடிப்படையில் கங்கை நதியின் தூய்மைக்காக வேலை செய்கின்றனர் கங்கை நதி கரையில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை தினந்தோறும் அகற்றுகின்றனர் விகாஸ் சந்திராவின் அனைத்து செயல்பாடுகளிலும் உறுதுணையாக நிற்கின்றனர்
விகாஸ் சந்திரா தனது இந்த வாழ்க்கை பயணம் மிக சவால் நிறைந்ததாக இருந்தது என்கிறார் நான் பலமுறை போராட்டங்களிலிருந்து பின் வாங்க வேண்டுமென மிரட்டப்பட்டேன் என்கிறார். ஆனால் கங்கை நதியை காப்பதில் இருந்து என்னை எந்த சக்தியும் தடுக்க முடியாது என சங்கல்பம் செய்து கொண்டதாக கூறுகிறார்
இன்று கங்கை தனது புனித நிலையை மீண்டும் அடைந்து கொண்டுள்ளது. ஆனால் விகாஸ் சந்திரா தனது செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ள விரும்பவில்லை. உண்மையில் இந்த போராட்ட வாழ்வின் காரணமாக தனது 52 ஆவது வயதில் தான் திருமணமே செய்துகொண்டார். தனது லட்சிய வாழ்க்கையை இன்னமும் தொடர்கிறார்.