மணவாளனின் உன்னத மலைகள்

Previous....மணவாட்டியின் மார்பகங்கள்

மணவாளனின் உன்னத மலைகள்

"பகல் குளிர்ச்சியாகி நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும், நான் வெள்ளைப்போளமலையிலும் சாம்பிராணிமலையிலும் போயிருப்பேன்", என்று மணவாளன் மணவாட்டிக்கு தனது இருப்பிடத்தை அறிவிக்கிறார் (உன்னதப்பாட்டு 4:6).தன்னைவிட்டு மணவாளன் தற்காலிகமாக விலக்கிக்கொண்டதும், மணவாட்டி அவரது வெற்றிடத்தை உணர்ந்து, இரவு வரப்போவதை அறிந்து பயம்கொள்கிறாள். மணவாட்டியே, நீயும் உன் ஆத்தும மணவாளனைப் பிரிந்து இருக்கக்கூடும். பகல் குளிர்ச்சியாகி இரவு அணுகையில் நீ பயந்து நடுங்கிக் கொண்டிருக்கலாம். அவரின் மேலுள்ள விசுவாசம் முற்றிலும் செத்துப் போயிருக்கலாம்.

மணவாளன் தான் எங்கே போகிறார் என்று மணவாட்டிக்கு அறிவிக்கிறார். வெள்ளைப்போளமலையிலும் சாம்பிராணிமலையிலும் போயிருப்பேன் என்று தனது இருப்பிடத்தை மணவாட்டியின் காதில் உரைக்கிறார். வெள்ளைப்போளம், சாம்பிராணி போன்ற திராவியங்களை குழந்தை இயேசுவிற்கு பரிசாக கிழக்கிலிருந்து வந்த சாஸ்திரிகள் கொடுத்தனர். இந்த விலையுயர்ந்த வாசனை பொருட்கள் ராஜாவை அபிசேஷகம் பண்ண உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த உயர்ந்த மலைகள் கிறிஸ்துவின் பரிசுத்தத்தைக் குறிக்கிறது. தகுதியில்லாத மணவாட்டியை இந்த உயர்ந்த ராஜரீக மலைகளுக்கு அழைக்கிறார். நமது ஆத்மீக இருப்பிடம் இந்த மலைகளின் மேல் தான்! கீழான இடங்களை நாடிப் போகவேண்டாம். "இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்" (எபே 2:7).

Next....நீ பூரண ரூபவதி