அவளை விழிக்கப்பண்ணாமலும்

Previous......அணைத்துக்கொள்ளும் கைகள்

அவளை விழிக்கப்பண்ணாமலும்

"எருசலேமின் குமாரத்திகளே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும், நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலுமிருக்கும்படி வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் உங்களை ஆணையிடுகிறேன்", என்று மணவாளன் அவரது மணவாட்டியின் மேல் வைத்திருக்கும் அன்பையும், அக்கறையையும் பற்றி அவளது தோழிகளை நோக்கி கூறுகிறார் (உன்னதப்பாட்டு 2:7). அவள், மணவாளனின் அன்பில் மூழ்கி ரசித்துக்கொண்டிருக்கும் மணவாளியை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலுமிருக்கும்படி அவளது தோழிகளுக்கு கட்டளை இடுகிறார். தனது தோழிகள் தன் நிலைமையை புரிந்துக்கொள்ளாமல், பயந்துபோய் , நம்பிக்கை இழந்து நிற்கும் மணவாளியின் மேல் மணவாளன் தனது நேசத்தை வற்றாத ஓடை போல பொழிகிறார். அவளின் தோழிகள் இந்த நேசத்தை பெறவிடாமல் இடையில் நிற்கும்போது மணவாளன் அவர்களை இவ்விதம் வேண்டுகிறார். ஒரு மனம் நொடிந்த தேவ ஊழியன் தனது எசமானனான கிறிஸ்துவிடமிருந்து தனிப்பட்ட முறையில் நேசத்தை பெறுகிறார். அந்த ஊழியன் தேவ மக்களுக்கு இடைவிடாது செய்த சேவைகளால் தேவனோடு தொடர்பு கொள்ளமுடியாமல் தவிக்கும்போது, தேவன் தாமே தனது ஊழியனுக்கு ஆறுதலாக இருக்கிறார். தேவ மக்கள் ஊழியனின் சேவையை மாத்திரம் நாடும்போது, தேவனோ தனது ஊழியனின் நலத்தை மாத்திரம் விரும்புகிறார்.

ஏன் மணவாளன் "வெளிமான்களையும், வெளியின் மரைகளையும் அழைத்து ஆணையிடுகிறார்? இந்த மிருகங்கள் மென்மையான அடக்கமான குணங்களை உடையவைகள். பரிசுத்தாவியானவரும் இந்த நற்குணங்களை உடையவராகும். இங்கே ஒரு கவிதையின் நயத்தை காண்கிறோம். உன்னதப்பாட்டின் புத்தகமே ஒரு கவிதை தான்.

Next...... நேசருடைய சத்தம்