மணவாளனின் கன்னங்கள், உதடுகள்

Previous.....தண்ணீர் நிறைந்த கண்கள்

மணவாளனின் கன்னங்கள், உதடுகள்

"அவர் கன்னங்கள் கந்தவர்க்கப்பாத்திகளைப்போலவும், வாசனையுள்ள புஷ்பங்களைப்போலவுமிருக்கிறது; அவர் உதடுகள் லீலிபுஷ்பங்களைப்போன்றது, வாசனையுள்ள வெள்ளைப்போளம் அதிலிருந்து வடிகிறது ", என்று தொடர்ந்து மணவாளி தன் தோழிகளிடம் மணவாளனின் மகத்துவ ஆள்தத்துவத்தை புகழ்ந்து பாடுகிறாள் (உன்னதப்பாட்டு 5:13).இயேசுவின் முகத்தில் துப்பி, அவரைக் குட்டினார்கள்; சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்தார்கள் (மத்தேயு 26:67). ஏசாயா தீர்க்கன் சிலுவையிலறைந்த இயேசுவின் தோற்றத்தைக் குறித்து இவ்வாறு எழுதுகிறான்; "அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமும் இல்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது" (ஏசாயா 53:2)......அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடைகளையும் ஒப்புக்கொடுத்தேன்; அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை" (ஏசாயா 50:6).

அடிக்கப்பட்ட இயேசுவின் கன்னங்கள் சிவந்து கந்தவர்க்கப்பாத்திகளைப்போல காணப்பட்டன. பிளந்த கன்னங்கள் வாசனையை பரப்பும் மலர்ந்த புஷ்பங்களைப்போலவுமிருக்கிறது. அவரின் வறண்ட, இரத்தம் தோய்ந்த உதடுகள் லீலிபுஷ்பங்களைப் போல காட்சியளிக்கிறது. வாசனையுள்ள வெள்ளைப்போளம் அந்த இரத்தம் தோய்ந்த உதடுகளிலிருந்து வடிகிறது.

வெள்ளைப்போளம் அவரின் பரிசுத்தத்தைக் குறிக்கிறது. பாவத்தை வேரோடு அழிக்கும் பரிசுத்தம் அவரின் பிக்கப்பட்ட சரீரத்தின் மூலம் வெளிப்பட்டன. அவரின் உதடுகள் பாவத்தைப் போக்கும் ஜீவ வார்த்தைகளை இந்த உலகத்திற்கு கொடுத்தது. சிலுவையில் தொங்கிக்கொண்டு தனது இரத்தம் தோய்ந்த உதடுகளின் மூலம் கள்ளனுக்கு பாவமன்னிப்பு கொடுத்தார்.

Next.....மணவாளனின் கரங்கள், அங்கம்