என் உத்தமியோ ஒருத்தி

Previous....மணவாளியின் கன்னங்கள்

என் உத்தமியோ ஒருத்தி

"ராஜஸ்திரீகள் அறுபதுபேரும், மறுமனையாட்டிகள் எண்பதுபேருமுண்டு; கன்னியருக்குத் தொகையில்லை.என் புறாவோ, என் உத்தமியோ ஒருத்தியே; அவள் தன் தாய்க்கு ஒரே பிள்ளை; அவள் தன்னைப் பெற்றவளுக்கு அருமையானவள்; குமாரத்திகள் அவளைக் கண்டு, அவளை வாழ்த்தினார்கள்; ராஜஸ்திரீகளும் மறுமனையாட்டிகளும் அவளைப் போற்றினார்கள்" என்று மணவாளன் தன் மணவாளியின் விசேஷத்தன்மையை புகழ்கிறார் (உன்னதப்பாட்டு 6:8,9).சாலொமோன் ராஜாவிற்கு 60 ராஜஸ்திரீகள், 80 மறுமனையாட்டிகள்; எண்ணிலடங்காத கன்னியர்கள் இருப்பினும் அவர் சுலேமேத்தியாளை எல்லாரையும் விட அதிகம் நேசித்தார். அருமையான மணவாளியே, உன்னைச் சுற்றிலும் ஆயிரமாயிரம் தேவ பிள்ளைகள் இருந்தாலும் உன் நேசர் உன்னைத்தான் அதிகம் நேசித்துவருகிறார். மறுமனையாட்டிகள் என்பவர்கள் கிறிஸ்துவை மணம் புரிந்தவர்களாக இருந்தாலும் இந்த உலக இன்பங்களுக்கு தங்களை ஒப்புக்கொடுத்து, கிறிஸ்துவை வைத்து உலக ஆதாயம் பண்ணுபவர்கள். இவர்களுக்கும் ராஜஸ்திரீகளுக்கும் வித்தியாசம் உண்டு. ராஜஸ்திரீகள் கிறிஸ்துவுக்காக உண்மையாக உழைத்து அவரை மாத்திரம் சேவிப்பவர்கள். நூறு பேர்கள் இருக்குமிடத்தில் எண்பது பேர்கள் மறுமனையாட்டிகள் அறுபது பேர்கள் ராஜஸ்திரீகள். எண்பது மறுமனையாட்டிகள் அறுபது மறுமனையாட்டிகளைவிட கூடுதல்பேர். அதாவது பெரும்பாலானோர் மறுமனையாட்டிகளாக கிறிஸ்தவ உலகத்தில் வாழ்கிறார்கள்.

அறுபது ராஜஸ்திரீகள் போன்ற பிரசித்திபெற்ற ஊழியர்கள் இருந்தாலும் அவர் உன்னைத்தான் அதிகம் நேசிக்கிறார். எண்பது மறுமனையாட்டிகள் போன்ற இவ்வுலக ஐசுவரியத்தால் ஊழியம் செய்யும் ஊழியர்கள் இருந்தாலும் அவர் உன்னைத்தான் அதிகம் நேசிக்கிறார்.

எண்ணிலடங்காத கன்னியர்கள் போன்ற தேவ மக்கள் அவருக்கு தியாகத்தோடு, தங்கள் சரீரங்களை பரிசுத்தத்துடன் பேணி இயேசுவை சேவித்துவருகிறார்கள் ஏனென்றால் இந்த கன்னியர்கள் சோதனைக்காரனோடு போராடாமல் தங்களின் தூய்மையை காத்துக்கொள்கிறார்கள். இந்த எண்ணிலடங்காத கன்னியர்கள் இருந்தாலும், அவர் உன்னிடம் கவர்ந்து ஈர்க்கப்பட்டிருக்கிறார்! அப்படி உன்மேல் என்ன விசேஷித்த குணங்கள் இருக்கிறது?

"என் புறாவோ, என் உத்தமியோ ஒருத்தியே; அவள் தன் தாய்க்கு ஒரே பிள்ளை". நீயே அவரின் புறா! நீ அவருக்கு உத்தம! நீ எல்லா ராஜஸ்திரீகளிலும், மறுமனையாட்டிகளிலும், எண்ணிலடங்காத கன்னியர்களிலும் நீ தான் உன்னைப் பெற்றடுத்த கிறிஸ்துவாகிய சரீரமான சபைக்கு ஒரே பிள்ளை!

இவர்கள் எல்லோரும் சேர்ந்து உன்னை வாழ்த்துவதற்கும் போற்றுவதற்கும் உன்னிடம் என்ன விசேடத்துவம் இருக்கின்றது? இந்த புதிரை யாராலும் புரிந்துகொள்ளவே முடியாது!

Next...... மணவாளியின் விசித்திர அழகு