மணவாளியின் சோம்பேறித்தனம்

Previous.....என் நேசரின் சத்தம்

மணவாளியின் சோம்பேறித்தனம்

"என் வஸ்திரத்தைக் கழற்றிப் போட்டேன்; நான் எப்படி அதைத் திரும்பவும் உடுப்பேன், என் பாதங்களைக் கழுவினேன், நான் எப்படி அவைகளைத் திரும்பவும் அழுக்காக்குவேன் என்றேன்" என்று மணவாளி மணவாளனின் சத்தத்தைக் கேட்டு அவரிடம் உரைக்கிறாள் (உன்னதப்பாட்டு 5:3)மணவாளி மணவாளனின் சத்தத்தைக்கேட்டும், கன நித்திரையிலிருந்து எழும்பி வர மனதில்லை. மனக்கதவை உடனே திறக்காமல், தனக்கு வரவேண்டிய ஆசீர்வாதங்களை இழந்துவிடுகிறாள். இன்று இதேபோல கிறிஸ்து நம்மோடு உறவாட விரும்பும்போது நாம் ஏதாவது சாக்குச் சொல்லி காத்திருக்கும் மணவாளனை அலட்சியம் பண்ணுகிறோம். பரிசுத்தாவியானவரின் வழிநடத்துதலின்படி, துன்பம் அனுபவிக்கும் ஊழியர்களுக்காக பரிந்துபேசி ஜெபிக்க நாம் தவறி இருக்கிறோம். தெய்வீக எழுத்தர் மணவாளியின் சோம்பேறித்தனத்தை வார்த்தைகளால் கண்டிக்காமல், அவள் வஸ்திரத்தைக் கழற்றிப்போட்டதாகவும், பாதங்களைக் கழுவினதாகவும் கூறுகிறார்.

மணவாளியே, உனக்கு வஸ்திரம் தான் முக்கியமா? உனது அழுக்குப்படிந்த பாதங்கள் தான் முக்கியமா? உன்னுடைய பின்மாற்றம் மிகவும் கொடிதினும் கொடிதானது. மணவாளனை பனி மழை பெய்ய காத்திருக்க வைக்காதே! எல்லாவற்றிற்கும் காலமுண்டு. எத்தனை நாட்கள் பனி தங்கிய தலை முடியோடு காத்துக்கொண்டிருப்பார்?

Next..... கதவுத் துவாரத்தில் நேசரின் கை