எழுந்து வா

Precious.....மதிலுக்குப்புறம்பே

எழுந்து வா

மதிலுக்குப்புறம்பே நின்று, பலகணி வழியாய்ப் பார்த்து, கிராதியின் வழியாய்த் தமது மலர்ந்த முகத்தைக் காண்பித்து, மணவாளன் மணவாளியின் காதில் மெல்லிய சத்தத்தில் அவளோடு பேச, அவள், "என் நேசர் என்னோடே பேசி: என் பிரியமே! என் ரூபவதியே! எழுந்து வா". என்று பாடுகிறாள் (உன்னதப்பாட்டு 2:10).

அவரது குரலைக்கேட்டு, மகிழ்ந்து, துள்ளிக்குதித்து தன் தோழிகளிடம், "என் நேசர் என்னோடே" பேசுகிறார் என்கிறாள். அவள் மாத்திரம் தான் இந்த இனிய குரலைக் கேட்கிறாள். ஆனால் அவள் தோழிகளோ இந்த குரலைக் கேட்கவில்லை! அவள் அவளின் தோழிகளைவிட ஆசிர்வதிக்கப்பட்டவள்! அருமையான மணவாட்டியே, மெய்யாகவே, நீ அவரின் பிரியமே! அவரின் ரூபவதியே! மற்றவர்களின் கண்களில் நீ கருப்பாக காட்சியளிக்கலாம்! ஆட்டுக்குட்டியானவரின் ரத்தத்தால், நீ மறுபடியும் கழுவப்பட்டு, அவரின் பார்வையில் ஒரு ரூபவதியே! அழகி போட்டியில் போட்டியிடும் பெண்களின் நடுவர்கள் வெளித்தோற்றத்தை கணித்துத்தான் தீர்ப்பு அளிக்கிறார்கள். ஆனால் யேசுவோ உங்களது உள்ளான மனிதனின் உருவத்தைக் காண்கிறார். "தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர். ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர், நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே..." (ரோமர் 8:33-34). கிறிஸ்துவின் மணவாட்டியை, சாத்தானோ, வேறு எந்த மனிதனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவே முடியாது. மணவாட்டிக்காக தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருந்து வேண்டுதல் செய்கிறவர் அவரே!

அருமையான மணவாட்டியே, இன்றே நீ உன் கன நித்திரையிலிருந்து எலும்பு! உன்னை சுற்றிக் கட்டியுள்ள கட்டுக்களை அவிழ்த்துவிட்டு எழுந்து உன் மணவாளனிடம் ஓடு! "எழுந்திருந்து போங்கள்; இது நீங்கள் இளைப்பாறும் இடம் அல்ல, இது தீட்டுப்பட்டது, இது உங்களை நாசப்படுத்தும், அந்த நாசம் மிகவும் கொடியதாயிருக்கும்" (மீகா 2:10). நீ இந்த உலகின் சத்தங்களிலிருந்தும், உன்னைக் குற்றப்படுத்தும் குரல்களிருந்தும், உன்னைப் புரிந்துகொள்ளாத மக்களிடமிருந்தும், விலகி, உன் மணவாளன் அருகில் வந்துவிடு! உள்ளபடியே வா! அவரிடம் தனித்திரு! வேறு யாருமே இருக்கக்கூடாது! வனாந்தரத்தில் அவரும் நீயும் மாத்திரம் தான்!

Next......மாரிகாலம்