திரும்பி வா

Previous.....அம்மினதாபின் இரதங்கள்

திரும்பிவா

ராஜா சாலொமோன் சூலமித்தியாளின் அழகை விவரித்ததை எருசலேமின் குமாரத்திகள் கேட்டு சூலமித்தியாளை காண விரும்புகின்றனர். அவர்கள் அவளை நோக்கி, "திரும்பிவா, திரும்பிவா, சூலமித்தியே! நாங்கள் உன்னைப் பார்க்கும்படிக்கு, திரும்பிவா, திரும்பிவா. சூலமித்தியில் நீங்கள் என்னத்தைப் பார்க்கிறீர்கள்? அவள் இரண்டு சேனையின் கூட்டத்துக்குச் சமானமானவள்". என்றனர் (உன்னதப்பாட்டு 6:13).அன்பார்ந்த கிறிஸ்துவின் மணவாளியே, உன்னைப் பற்றியும், உனது ஆவிக்குரிய அழகைப் பற்றியும் அறிந்த தேவப் பிள்ளைகள், அவர்களிடம் திரும்பிவந்து உன்னை ஊழியம் செய்ய விரும்பி அழைப்பார்கள். இவர்கள் ஒரு காலத்தில் உன்னை இகழ்ந்திருக்கலாம். இப்போதோ, உனது முக்காட்டை மணவாளன் திறந்து உன்னை கிறிஸ்தவ உலகத்திற்கு வெளிப்படுத்துகின்றார். கிறிஸ்தவ உலகத்தில் இதுவரை பணத்தினாலும், கீர்த்தியாலும் ஊழியம் செய்த ஊழியர்களிடமிருந்து உன்னை வித்தியாசப்படுத்திக் காண்கின்றார். "சூலமித்தியில் நீங்கள் என்னத்தைப் பார்க்கிறீர்கள்?" உன்னில் அப்படி என்னத்தைப் பார்க்கிறார்கள்! உன்னிடம் பணமோ. செல்வாக்கோ இல்லை. உன்னிடம் பரிசுத்தாவியானவரைத் தவிற வேறு யாரோ, எந்த ஸ்தாபனமோ, இல்லை! உன்னைப் பின்பற்றி வர ஒரு கூட்டமே இல்லையே! ஆனால் உன்னை இரண்டு சேனையின் கூட்டத்துக்குச் சமானமானவள் என்று சொல்லும் காலம் வருகிறது. ஆண்டவர் சபைகளில் எழுப்புதல் கொண்டுவருவது உன்னைப்போன்ற பள்ளத்தாக்கில் தங்களை கிறிஸ்துவிற்குள் மறைத்துக்கொள்ளும் உண்மையான ஊழியர்கள் மூலமே!

உன்னை கிறிஸ்து ஒரு எழுப்புதலின் கருவியாக உபயோகப்படுத்தும்போது, நீ உன்னைக் குறித்தோ உனது தாழ்மையான ஊழியத்தை உயர்த்திக் காண்பிக்காதே! தன்னை கறுப்பானவள் என்று தாழ்த்தும் சூலமித்தியாளை போல "நீங்கள் என்னத்தைப் பார்க்கிறீர்கள்?" சொல்வாயாக! ஆனால் கிறிஸ்து உனது ஊழியத்தின் மூலம் அந்திக்கிறிஸ்துவின் கோட்டையை தனது தேவ தூதர்களின் சேனைகளை வைத்து நொறுக்குவார்!

Next.....ராஜகுமாரத்தியின் பாதங்கள்