முள்ளுகளுக்குள்ளே லீலிபுஷ்பம்

Previous...சாரோனின் ரோஜா

முள்ளுகளுக்குள்ளே லீலிபுஷ்பம்

“முள்ளுகளுக்குள்ளே லீலிபுஷ்பம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரத்திகளுக்குள்ளே எனக்குப் பிரியமானவளும் இருக்கிறாள்”, என்று மணவாளன் தன் மணவாட்டியைக் குறித்து சாட்சி கொடுக்கிறார் (உன்னதப்பாட்டு 2:2). கடினமான பள்ளத்தாக்கில் எப்படி லீலிபுஷ்பம் வளர்கிறதோ, நீங்களும் பள்ளத்தாக்கிலே வளர்கிறீர்கள். தேவனது கிருபையினால் உண்டாகும் உங்களின் இந்த ஆவிக்குரிய வளர்ச்சியை மனிதனின் கண்களுக்கு தெரியப்படாது. ஏனெனில் இந்த வளர்ச்சியைக் கொடுப்பது தேவன் தான். ஆவிக்குரிய அர்த்தத்தில் நாம் வாழும் இந்த உலகம்தான் ஒரு பள்ளத்தாக்கு. இது ஒரு பாவமும் மரணமும் நிறைந்த பள்ளத்தாக்கு. இது கண்ணீர், கவலை நிறைந்த பள்ளத்தாக்கு. சோதனைகள், போராட்டங்கள் நிறைந்த பள்ளத்தாக்கு. நம்பிக்கையின்மை, துன்பங்கள், உபத்திரவங்கள் நிறைந்த பள்ளத்தாக்கு. நீங்கள் இந்த உலகத்திலிருக்கும்போது இந்த பள்ளத்தாக்கில் தான், மலையுச்சியில் அல்ல, வாழ்ந்து வருகிறீர்கள். சில சமயங்களில் மறுரூப மலையின் இயேசுவின் சீடர்களுக்குக் கிடைத்த தரிசனங்கள் உங்களுக்கு கிடைக்க கூடும். பேதுரு இயேசுவை நோக்கி: "ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்குச் சித்தமானால், இங்கே உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான்". பேதுருவைப் போல, "நாம் இங்கே இருக்கிறது நல்லது" என்று சொல்லவேண்டாம்.

நீங்கள் இந்த பள்ளத்தாக்கில் தற்செயலாக இருக்கவில்லை. நீங்கள் லீலிபுஷ்பம் வளரும் இந்த பள்ளத்தாக்கின் சொந்தக்கார்கள்தான். உங்களின் வாழ்க்கையானது எப்போதும் பேரின்பம் நிறைந்ததாக இருக்காது. உங்கள் வாழ்க்கை முட்கள் சூழ்ந்துள்ள உள்ள ரோஜாவைப் போலாகும். அல்லது பள்ளத்தாக்கில் வளரும் லீலிபுஷ்பதைப் போலாகும்.

"குமாரத்திகளுக்குள்ளே எனக்குப் பிரியமானவளும் இருக்கிறாள்"என்று மணவாளன் கூறுகிறர். முட்கள் சூழ்ந்திருந்தாலும், ரோஜா மலர்கிறது. முட்கள் இருக்கட்டும்! லீலிபுஷ்பம் பள்ளத்தாக்கில் வளரத்தான் செய்யும். இந்த முட்கள், குற்றம் கண்டுபிடிக்கும் எருசலேமின் தோழிகள் போலாகத்தான். இந்த தோழிகள் உங்களை எப்போதும் குற்றம் கண்டுபிடித்து முட்களைப்போல குத்திக்கொண்டிருக்கலாம். இந்த தோழிகளின் மத்தியில் சில தீர்க்கதரிசிகளும் இருக்கிறார்கள். அவர்கள் சத்தமிட்டுக் கூப்பிட்டு, எக்காளத்தைப்போல சத்தத்தை உயர்த்தி, உங்கள் மீறுதலையும், பாவங்களையும் உணர்த்துவார்கள் (ஏசாயா 58:1). அவர்களை கால்வைத்து உதைக்காதே. முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் (அப். 9 : 5).

Next..... கிச்சிலிமரம்