மணவாளியின் திராட்சத்தோட்டம்

Previous.....மணவாளனின் திராட்சத்தோட்டம்

மணவாளியின் திராட்சத்தோட்டம்

"என் திராட்சத்தோட்டம் எனக்கு முன்பாக இருக்கிறது; சாலொமோனே! உமக்கு அந்த ஆயிரமும், அதின் கனியைக் காக்கிறவர்களுக்கு இருநூறும் சேரும்" (உன்னதப்பாட்டு 8:12).சூலமேத்தியாள் இப்போது தனது திராட்சத்தோட்டத்தை பற்றி கூறுகிறாள். இவளது திராட்சத்தோட்டம் சாலொமோனின் திராட்சத்தோட்டத்தை விட வித்தியாசமானது. கிறிஸ்துவின் திராட்சத்தோட்டத்தில் நீ உனது இரட்சிப்பை அனுபவமாக்கிக் கொள்கிறாய். உனக்கு வேண்டிய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்கிறாய். ஆனால் உன் திராட்சத்தோட்டத்திலிருந்து உனக்கு வேண்டிய ஆசீர்வாதங்களை எடுத்துக்கொள்ளாதே. மற்றவர்களுக்கு வேண்டிய ஆசிர்வாதங்களுக்காக உன் தோட்டத்தில நீ கிறிஸ்துவோடு உடன் வேலையாளியாக உழைக்கவேண்டும். நீ எந்தவிதமான ஆதாயத்தையும் உனது ஊழியம் மூலம் தேடக்கூடாது. ஒவ்வொரு கிறிஸ்துவின் சீடருக்கு ஒரு தனிப்பட்ட திராட்சத்தோட்டம் "முன்பாக இருக்கிறது". கிறிஸ்து இந்த தோட்டத்தில் வந்து கனிகளைத் தேடுவார். கனி கொடுக்கும் மரங்களையும் செடிகளையும் பராமரிக்க வெண்டும். உன் தோட்டத்தில் நடப்பட்டுள்ள அநேக ஊழிய மரங்களுக்கவும், செடிகளுக்காவும் நீ தண்ணீர் ஊற்றவேண்டும். அவைகளுக்குத் தேவையான ஆகாரமான உரங்களையும் போடவேண்டும். பொருள் உதவி, பண உதவி போன்றவைகள் தான் இந்த உரம். நீர் பாய்ச்சுதல் என்பது உன் கண்ணீரின் வேண்டுதல்கள் தான்!

நீ உனது தோட்டத்தின் மூலம் உனது சொந்த செலவிற்காக, அதாவது குடும்ப செலவிற்காக ஒரு பகுதியை எடுத்துக்கொள்ளலாம். "ஆசாரிய ஊழியஞ்செய்கிறவர்கள் தேவாலயத்திற்குரியவைகளில் புசிக்கிறார்களென்றும், பலிபீடத்தை அடுத்துப் பணிவிடை செய்கிறவர்களுக்குப் பலிபீடத்திலுள்ளவைகளில் பங்கு உண்டென்றும் அறியீர்களா?.... அந்தப்படியே சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்குச் சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார்" (1 கொ 9:13-14). வேத சொல்லியலின் படி, ஆயிரம் என்றால் ஒரு பெரிய தொகை. கிறிஸ்துவிற்கு ஆயிரம் கொடுக்கவேண்டும்! உனக்கு வந்து சேரவேண்டிய பகுதி இரு நூறு. அதாவது 1/6 என்னும் விகிதம்! கனியைக் காக்கிற நீ இருநூறு ரூபாய் எடுத்துக்கொள்ளலாம். கிறிஸ்துவிற்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கவேண்டும்.

Next...... மணவாளியின் குரல்