நேசத்தால் சோகம்

Previous.....விருந்து சாலை

நேசத்தால் சோகம்

"திராட்சரசத்தால் என்னைத் தேற்றுங்கள், கிச்சிலிப்பழங்களால் என்னை ஆற்றுங்கள்; நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன்", என்று மணவாட்டி தன் மணவாளனை நோக்கி கூறுகிறாள் (உன்னதப்பாட்டு 2:5). உண்மையாகவே, மனச் சோர்வடைந்த மணவாட்டி, மணவாளனின் திராட்சரசத்தாலும், கிச்சிலிப்பழங்களாலும் தான் தேற்றப்படும்படி ஏங்குகிறாள்! பெலவீனமான சரீரத்திற்கு திராட்சரசம், கிச்சிலிப்பழங்கள் மிகவும் அவசியம். திராட்சரசம் கிறிஸ்துவின் ரத்தத்தையும், கிச்சிலிப்பழங்கள் நமது ஆத்துமாவை பலப்படுத்தும் தேவவார்த்தைகளையும் குறிக்கிறது. சாத்தானால் தாக்கப்படட நமது ஆத்துமாவிற்கு மருந்து தேவவார்த்தை தான்! அருமையான மணவாட்டியே, உனக்கு பின்மாற்றங்கள் இருப்பினும், இன்று நீ ஆத்துமாவில் பிழைத்திருப்பதற்கு காரணம், உன்னை காத்துவந்தது தேவவசனமே! உதாரணமாக, 91ம் சங்கீதத்தில் தேவன் நமக்கு கொடுத்த அடைக்கல பாதுகாப்பின் மூலமாக நம்மில் அநேகர் விபத்துகள், கொடிய நோய்கள், சாத்தானின் தாக்குதல்கள் போன்ற இவைகளிலிருந்து காக்கப்பட்டுவருகிறோம். நமக்கு கிச்சிலிப் பழங்கள் போன்ற ஆசிர்வாதங்களைக் கொடுத்து நம்மை இந்த உலகில் மணவாளன் தேற்றி வருகிறார். இந்த விசேஷித்த ஆசிர்வாதங்கள், உங்களை உலக மக்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காண்பிக்கிறது. இந்த பாலைவனமாக உலகத்தில் மணவாளன் ஒரு நீர் தடாகத்தை உண்டுபண்ணுகிறார். இந்த நீர் தடாகம் உலக மக்களின் கண்களுக்குத் தெரியாது!

Next.....அணைத்துக்கொள்ளும் கைகள்