அழியும் தோட்டங்கள்

Previous....கிராமங்களில் தங்குவோம்

அழியும் தோட்டங்கள்

"அதிகாலையிலே திராட்சத்தோட்டங்களுக்குப் போவோம்; திராட்சக்கொடி துளிர்த்து அதின் பூ மலர்ந்ததோ என்றும், மாதளஞ்செடிகள் பூப்பூத்ததோ என்றும் பார்ப்போம்; அங்கே என் நேசத்தின் உச்சிதங்களை உமக்குத் தருவேன்". என்று மணவாளி மணவாளனைப் பார்த்து கூறுகின்றாள். (உன்னதப்பாட்டு 7:12).

நடு ராத்திரியிலோ அதிகாலையிலே நீ எழுந்து ஜெபிக்க கற்றுக்கொள்ளவும், உனது மணவாளனோடு உறவாடி உன் இருதயத்தின் எண்ணங்களை கொட்டிவிட வேண்டும். உனது தோட்டம் அங்கேதான் இருக்கிறது. நீயும் உன் நேசரும் சேர்ந்து உங்களது தோட்டத்திலுள்ள திராட்சக்கொடி துளிர்த்து அதின் பூ மலர்ந்ததோ என்றும், மாதளஞ்செடிகள் பூப்பூத்ததோ என்றும் பார்க்கவேண்டும். ஒவ்வொரு திராட்ச செடி போன்ற ஊழியர்களுக்காகவும், மாதளஞ்செடிகள் போன்ற ஊழியர்களுக்காகவும் உன் நேசரோடு இணைந்திருந்து ஜெபிக்கவேண்டும். பூக்கள் மலர்ந்ததோ என்றும், பூப்பூத்ததோ என்றும் பார்க்கவேண்டும். இந்த ஊழியர்கள் செய்யும் ஊழியங்களை நன்கு அறியவேண்டும். அந்தி கிறிஸ்துவானவன் இந்த செடிகளை வேரோடு அழிக்கவோ, பூக்களை அழிக்கவோ முயற்சி செய்வான். இன்றோ அநேக திராட்சக்கொடி துளிர்த்த ஊழியங்களை அழித்துவிட்டான். தன் கொடூரமான பற்களால் அவைகளை வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டான். கிறிஸ்துவின் இரத்தமாகிய திராட்ச ரசம் பாவிகளை இரட்சிக்கிறது. ஆனாலோ இந்த மெய்யான திராட்ச ரசம் கொடுக்கவிடாமல், ஒரு போலியான சுவிசேஷத்தை நமக்கு கொடுக்கும் கள்ள சுவிசேடர்கள் உண்டு.

மாதளஞ்செடிகள் போன்ற ஊழியங்களை, களைகள் மூலம் பலவீனமாக்கி கனிகொடுக்க விடாமல் தடுத்துக்கொண்டிருக்கிறான். மாதுளம் கனிகள் கிறிஸ்துவின் சரீரமான சபைக்கு ஒரு நோய்த்தடுப்பு மருந்தை கொடுக்கிறது. இன்று அநேக தீர்க்கதரிசன ஊழியங்களை வேரோடு அந்தி கிறிஸ்துவானவன் அழித்துவிட்டான். தீர்க்கதரிசிகள் எங்கே?

நாம் அயர்ந்து நித்திரை செய்யும்போது சத்துருவானவன் களைகளை நமது தோட்டங்களில் முளைக்க வைத்துவிட்டான்.

மணவாளி தன் நேசத்தின் உச்சிதங்களை மணவாளனுக்கு தோட்டத்தில் தான் கொடுப்பாளாம்! மணவாளிக்கு எப்படி ஒரு பாரம்! எப்படி ஒரு ஏக்கம்! மணவாட்டியே, உனக்கு இதுபோல் உன் ஊழியத்தில் ஒரு பாரம் இருக்கிறதா? தன் நேசர், அவர்களது தோட்டத்தில் மணவாளியுடன் எப்போதும் இருக்க விரும்புகிறார் என அவள் நன்கு அறிவாள். இயேசு உன்னை நேசிப்பது நீ ஊழியத்தில் ஈடுபடும்போதுதான்!

Next.... நேசருக்கு அருமையான கனிகள்