மணவாளியின் ஸ்தனங்கள்

Previous.....மணவாளியின் நாபி, வயிறு


மணவாளியின் ஸ்தனங்கள்


“உன் இரண்டு ஸ்தனங்களும் வெளிமானின் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானமாயிருக்கிறது”, (உன்னதப்பாட்டு 7:3) என்று தொடர்ந்து சூலமித்தியாளின் தோழிகள் மணவாளியின் கவர்ந்திழுக்கும் மார்பகத்தை புகழ்கிறார்கள். இவளது இரண்டு ஸ்தனங்களையும் வெளிமானின் இரட்டைக்குட்டிகளுக்கு ஒப்பிடுகிறார்கள். மணவாட்டியே, உனது இடைவிடாத பரிந்துபேசும் விண்ணப்ப ஜெப ஊழியம் மூலம் அநேக ஊழியர்களுக்கு, குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாயைப்போல, ஊழியம் செய்கின்றாய். நீ ஒரு போதகராக இருந்தால் தேவ வசனங்களை புரட்டாமல், ஆவிக்குரிய உணவாக கிறிஸ்துவின் மந்தைக்கு ஊட்டவேண்டும். விண்ணப்ப ஜெப ஊழியம், போதிக்கும் ஊழியம். இரண்டையும் தியாகத்தோடும், உத்தமத்தோடும், எந்த விதமான நன்கொடையையோ , தசமபாகத்தையோ எதிர்பாக்காமல் செய்யவேண்டும். உனது தியாகமான கண்ணீர் ஜெப சேவையானது, பால் ஊட்டும் தாயின் ரத்தம் பாலாக மாறுவதுபோல, அமையவேண்டும். நீ கொடுக்கும் செய்தி வெறுமனே வேத அறிவினால் வராமல். நீ கீழ்ப்படிந்த தேவ வசங்களினால் வரவேண்டும். அதாவது உன் தலையிலிருந்து வராமல் உன் இருதயத்தின் அடியிலிருந்து வரவேண்டும்.

உனக்கு திருமறையின் முனைவர் பட்டம் இருக்காமலிருக்கலாம். உன் உள்ளில் வாசமாயிருக்கும் ஆவியானவர் பூர்ணமானவர். அவரே ஞானத்தின் இருப்பிடம். எல்லா ஞானமும் அறிவும் அவரிடத்தில் இருக்கிறது. முதலாம் நூற்றாண்டின் வாழ்ந்த கல்வியறிவு இல்லாதவர்கள்தான் . ஆனால் பரிசுத்தாவியானவர் அவர்களின் கைகளினால் அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்துவந்தார்.