மருதோன்றிப் பூங்கொத்து

Previous.......வெள்ளைப்போளச் செண்டு

மருதோன்றிப் பூங்கொத்து

என் நேசர் எனக்கு எங்கேதி ஊர் திராட்சத்தோட்டங்களில் முளைக்கும் மருதோன்றிப் பூங்கொத்து, என்று தன் மணவாளனின் மர்மமானதும், அதிசயமானதும் ஆள்தத்துவத்தை மணவாட்டி வர்ணித்து பாடுகிறாள்” (உன்னதப்பாட்டு 1:14). மணவாட்டியான இயேசுவின் சீடர்கள் அழகான, மணம்வீசும் எங்கேதி ஊர் திராட்சத்தோட்டங்களுக்கு ஒப்பானவர்கள். இயேசுகிறிஸ்து அந்த தோட்டங்களின் நடுவில் மலர்ந்து முளைக்கும் மருதோன்றிப் பூங்கொத்துக்கு ஒப்பானவர். தங்களின் தனிப்பட்ட வாழ்க்கைகளின் மூலம் கிறிஸ்துவை அறிகிற அறிவின் வாசனையை வெளியாக்கி, எங்கும் பரப்புகின்றனர். "கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.." (II கொரிந்தியர் 2:14). பின்வாங்கிப்போகும் மணவாட்டி இந்த மணம் வீசும் எங்கேதி ஊர் திராட்சத்தோட்டங்களுக்கு நேராக கவரப்படுகிறாள். அவள் அந்த தோட்டங்களின் நடுவில் தன் ஆத்ம மணவாளனை மருதோன்றிப் பூங்கொத்தாக மலர்ந்து கிடப்பதை கண்ணாறக் கண்டு மகிழ்கிறாள். அவள் பார்ப்பது ஒரு பூவை அல்ல. ஒரு பூங்கொத்தைக் காண்கிறாள். கிறிஸ்துவிடம் அநேக சுபாவங்கள் உண்டு. இன்று நமக்கு கிறிஸ்துவை பற்றி அறிவை கொடுக்கும் ஊழியர்கள் அவரின் ஒரு சில குணாதிசயங்களை மாத்திரம் வெளிப்படுத்துகிறார்கள். பின்மாற்றத்திலிருந்து மனம்திரும்பும், ஒரு சீடனுக்கு தேவ கோபத்தையும் நியாயத்தீர்ப்பையும் குறித்து மாத்திரம் பிரசங்கித்தால் போதாது. அவரது நீடிய பொறுமையையும், அவர் இப்போதும் மன்னிக்க வல்லவர் என்றும் போதிக்கவேண்டும். பாவத்தில் மூழ்கி கிடக்கும் சீடனுக்கு. அவரின் கோபாக்கினையையும், நரகத்தையையும் குறித்து போதிக்கவேண்டும். பாவத்திலிருந்து விடுதலையை தேடும் சீடனுக்கு அவரின் பரிசுத்தத்தைப்பற்றி அறிவிக்கவேண்டும்.

Next..... கண்கள் புறாக்கண்கள்