நீ ருபவதி

"நீ ருபவதி, என் பிரியமே! நீ ருபவதி; உன் முக்காட்டின் நடுவே உன் கண்கள் புறாக்கண்களாயிருக்கிறது; உன் கூந்தல் கீலேயாத் மலையில் தழைமேயும் வெள்ளாட்டு மந்தையைப்போலிருக்கிறது" (உன்னதப்பாட்டு 4:1). "நீ ரூபவதி" என்று அநேக இடங்களில் இந்த புத்தகத்தில் காணலாம். நீங்கள் உங்களுடைய பார்வையில் களங்கம் உள்ளவர்களாக இருந்தாலும் யேசுக்கிறிஸ்துவின் பார்வையில் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். இதுதான் உங்களைப்பற்றி கிறிஸ்துவின் சாட்சி! "நீ ரூபவதி"! கிறிஸ்து தனது கண்ணாடியை உங்களின் முன்னால் பிடித்து உங்களது சாயலை காணும்படி செய்கிறார். அவரின் கண்ணாடி உங்களின் கண்ணாடியைவிட மாறுபட்டது. அவரின் தனிப்பட்ட கண்ணாடியைப் பிடித்து உங்களுடைய காதுகளில் இரகசியம் பேசுகிறார், " என் பிரியமே! நீ ரூபவதி" என்று! புறா மென்மையானதும் அப்பாவியானதும் ஒரு பறவை! அது இலகுவாக வேடனின் கண்ணியில் அல்லது கழுகின் வாயில் விழுந்துவிடும். அதன் கண்களில் வஞ்சகம் காணப்படுவதில்லை. கிறிஸ்து, உங்களின் அப்பாவிதனத்தையும், மென்மையான குணத்தைக்குறித்தும் சாட்சி கூறமுடியுமா? மணவாட்டியே நீ கடந்த நாட்களை மறந்துவிடு. இன்று நீ அவரின் பார்வையில் ஒரு ருபவதி! ஏனென்றால் கிறிஸ்துவின் இரத்தம் உன்னை சுத்திகரித்துவிட்டது. தெய்வீக எழுத்தாளர் உன்னை பாவி என்றோ, கறுத்தவள் என்றோ அழைக்கவில்லை. தீர்க்கதரிசன புத்தகங்கள் இந்த கூற்றிற்கு மாறாக உன் நிலையை விவரிக்கிறது. ஏசாயா கூறுகிறார், "ஐயோ, பாவமுள்ள ஜாதியும், அக்கிரமத்தால் பாரஞ்சுமந்த ஜனமும், பொல்லாதவர்களின் சந்ததியும், கேடு உண்டாக்குகிற புத்திரருமாயிருக்கிறார்கள்; கர்த்தரை விட்டு, இஸ்ரவேலின் பரிசுத்தருக்குக் கோபமுண்டாக்கி, பின்வாங்கிப்போனார்கள்.....தலையெல்லாம் வியாதியும், இருதயமெல்லாம் பலட்சயமுமாய் இருக்கிறது.......உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் அதிலே சுகமில்லை; அது காயமும் வீக்கமும், நொதிக்கிற இரணமுமுள்ளது; அது சீழ் பிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும், எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருக்கிறது" (1:4-6).

சிலுவையில் அறையப்பட்ட இரட்சகரை நோக்கிப்பார்! உனக்காக அவர் தன் சௌந்தரியத்தை இழந்துவிட்டார். "அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமும் இல்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது" (ஏசாயா 53:2).

உன்னை "என் பிரியமே!" என்று அழைக்கிறார் நீ தான் அவரின் பிரியம். நீ அவரின் பார்வையில் மாத்திரம் அழகாக இருக்கிறாய். எருசலேமின் குமாரத்திகளின் கண்களில் நீ அழகாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. உனது புறாக்கண்கள் உன் முக்காட்டின் நடுவே இருக்கிறது. முக்காட்டின் பின்னே இருக்கும் உன் கண்களை யாராலும் தொட முடியாது. உனது பின்மாற்றத்தைக் குறித்து அநேக வார்த்தைகளால் கடிந்துக்கொள்ளாமலும். உனக்கு அறிவுரைகள் கூறாமலும், உன்னைக் குறித்து, "நீ ருபவதி, என் பிரியமே! நீ ருபவதி; உன் முக்காட்டின் நடுவே உன் கண்கள் புறாக்கண்களாயிருக்கிறது; உன் கூந்தல் கீலேயாத் மலையில் தழைமேயும் வெள்ளாட்டு மந்தையைப்போலிருக்கிறது", என்று சாட்சி கொடுக்கிறார். இதுதான் அவரின் உச்சிதமான, புரிந்துக்கொள்ளமுடியாத அன்பு! இந்த காரியம், ஒரு அன்பான தாய் தனது குறும்புத்தனமான மகனை கடிந்துக்கொள்ளாமல், "நீ ஒரு நல்ல பையன்", என்று சொல்வதற்கு சமமாகும். இதுதான் யாரும் புரிந்துக்கொள்ளமுடியாத உன்னதப்பாட்டின் புதிர்!

உன் கூந்தல் கீலேயாத் மலையில் தழைமேயும் வெள்ளாட்டு மந்தையைப்போலிருக்கிறது! ஒரு பெண்ணின் நீளமான கூந்தல் அவளுக்கு மகிமையாக இருக்கிறது (1 கொ 11:15). அவளின் கூந்தல் ஆபரணங்களைக் காட்டிலும் மேலானது. கிறிஸ்துவும் உன்னை தனது பிதாவின் மகிமையால் உன்னை மூடுகிறார் (யோவான் 17:22). கீலேயாத் மலையில் தழைமேயும் வெள்ளாட்டு மந்தை மிகவும் அழகாக காட்சியளிக்கிறது. ஒரே மந்தையாகத் தான் தோன்றுகிறது. அரபு நாட்டின் வெள்ளாட்டு மந்தை தனது கறுப்பு நிற கம்பளி முடியுடன், தனித்தனியாக காட்சியளிக்காமல் ஒரே மந்தையாக காட்சியளிக்கிறது. ஒவ்வொரு ஆடும் தனது தனித்தன்மையை இழந்து, ஒரே மேய்ப்பனின் மந்தையாக மலையின்மேல் மேய்கிறது. இதேபோல, ஒவ்வொரு சீடனும் தனது சுயத்தை இழந்து ஒரே மேய்ப்பனின் மந்தையில் சேர்ந்து, அந்த மேய்ப்பனின் பின்னால் பின்தொடர வேண்டும். கீலேயாத் மலை ஒரு கடினமான பாறைகளால் உண்டானது. இந்த மலைகளின் மேல் தான் மீதியானியரை கிதியோன் தோற்கடித்தான்( நியாயாதிபதிகள் 7:3). இந்த மலைகளின் மேல் தான் தேவன் உன்னை ஒரு ஆவிக்குரிய யுத்தத்திற்கு ஆயத்தம் பண்ணுகிறார். சாத்தானின் சேனைகளையும், அந்திக் கிறிஸ்துக்களையும் முறியடிக்க உங்களுக்குத் தேவன் பலன் அளிக்கிறார்.

Next.....மணவாட்டியின் பற்கள்