மணவாளியின் சௌந்தரியம்

Previous.....என் நேசர்

மணவாளியின் சௌந்தரியம்

"என் பிரியமே! நீ திர்சாவைப்போல் சௌந்தரியமும், எருசலேமைப்போல் வடிவமும், கொடிகள் பறக்கும் படையைப்போல் கெடியுமானவள்", என்று மணவாளன் தன்னை மணவாளிக்குக் காண்பித்துக்கொண்டு அவளின் அழகை புகழ்கிறார் (உன்னதப்பாட்டு 6:4).

திர்சா என்ற அழகான பட்டணம் சமரியாவின் அருகாமையில் இருந்தது. இந்த பட்டணம் இஸ்ரவேல் அரசர்களால் ஆளப்பட்டது. இது மகிழ்ச்சியின் பட்டணம். கிறிஸ்து உன்னை இந்த பட்டணத்திற்கு ஒப்பிடுகிறார். அழகான எருசலேமைப்போல் அவரின் பார்வையில் நீ சௌந்தரியமானவள், பூர்ணமானவள். இந்த உலகம் உன் வெளிப்புற தோற்றத்தை கண்டு, உன்னை அலட்சியமாக கருதலாம். ஆனால் கிறிஸ்துவோ அவரின் இரத்தத்தின் மூலமாக கழுவப்பட்ட உன் உள்ளான மனிதனைக் காண்கிறார். நீ சௌந்தரியமாக மாத்திரம் இல்லாமல், ஒரு கொடி பிடித்த போர் சேனையைப் போல வல்லமையுள்ளதாகவும் இருக்கிறாய். நீ வல்லமையில் பயங்கரமாய் இருக்கிறாய். நீ தனியாக இல்லை. உன்னை சுற்றிலும் ஒரு பெரிய தேவதூதர் கூட்டம் இருந்துகொண்டேயிருக்கிறது.

Next.... மணவாளியின் மயக்கும் கண்கள்