தோட்டங்களில் மேயும் நேசர்

Previous.....நேசர் எங்கே போனார்

தோட்டங்களில் மேயும் நேசர்

உன் நேசர் எங்கே போனார் என்ற தோழியரின் கேள்விக்கு, மணவாளி, "தோட்டங்களில் மேயவும், லீலிபுஷ்பங்களைக் கொய்யவும், என் நேசர் தமது தோட்டத்துக்கும் கந்தவர்க்கப் பாத்திகளுக்கும் போனார்" என பதிலளிக்கிறாள் (உன்னதப்பாட்டு 6:2). மணவாட்டியே நீ இயேசுவை, "என் நேசர்" என்று அழைக்கிறாயா? கிறிஸ்து இயேசு தனது தோட்டத்திற்குப் போகிறார். கிறிஸ்துவின் தோட்டம் தன் சீடர்கள்தான். இயேசு, "இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்" (மத் 18:20). கிறிஸ்துவை நேசிக்கும் சீடர்களின் கூடுகையே கிறிஸ்துவின் இருப்பிடம். அவரைத் தேடி எந்த கட்டிடத்திற்கோ, ஊருக்கோ போகவேண்டிய அவசியமே இல்லை. இன்று அவரின் செய்தியை கேட்க வெகு தூரத்துக்குப் போய் ஒரு கூட்டத்தில் தேவ மக்கள் அமர்கிறார்கள். ஒரு சிறிய குழுவில் போய் அமர்ந்து ஜெபிக்கவோ, வேதத்தை தியானிக்கவோ விருப்பமில்லை. அவரின் தோட்டத்தில் அநேக தோட்டங்கள் உண்டு. தனது சீடர்களின் ஆயிரக்கணக்கான தோட்டங்கள் அவரின் தோட்டத்தில் இருக்கின்றது. இந்த தோட்டங்களில் லீலிபுஷ்பங்களைப் போல கிறிஸ்துவின் நற்மணத்தை பரப்பும் சீடர்களின் ஊழியங்களை இயேசு நேசிக்கிறார். அந்த ஊழியங்களில் நடக்கும் காரியங்களை பார்த்து மகிழ்கிறார். ஒரு ஞாயிறு பள்ளியில் வந்து அமர்கிறார். ஒரு எழுத்தன் தன்னைக்குறித்து எழுதும்போது அதை ஆவலோடு படிக்கிறார். நான் எழுதிய இந்த புத்தகத்தை எத்தனைபேர் விரும்பி படித்து பயனடைந்தனர் என்று நான் ஏங்கியபோது கிறிஸ்துவே என் அருகிலிருந்து என் எழுத்துக்களைப் படிப்பதுபோல உணர்ந்திருக்கிறேன். நான் ஆங்கிலத்தில் இந்த புத்தகத்தை 2001ல் முதல் பதிப்பாக வெளியிட்டேன். அநேகருக்கு இலவசமாக புத்தகத்தை அனுப்பிக்கொடுத்தேன். இது வரை இந்த புத்தகத்தை முழுவதும் படித்துவிட்டு, தனக்கு ஆசிர்வாதம் கிடைத்தது என்று ஒரு வாசகர் கூட எனக்கு ஒரு வரிகூட எழுதவில்லை. ஆனால், என் நேசர் இந்த புத்தகத்தின் எல்லா ஆசிர்வாதங்களும் உனக்குத்தான் முதலில் என்று திட்டவட்டமாக என்னோடு பேசினார்.

இந்த தோட்டங்களில் கிறிஸ்துவின் கந்தவர்க்கங்களான பரிசுத்தம், நீதி, தயவு, கிருபை, தாழ்மை போன்றவைகள் இருந்தால் அந்த பாத்திகளுக்கும் போவார். இந்த கந்தவர்க்கங்கள் இல்லாவிட்டால், அவர் வெறுமனே தோட்டத்தைப் பார்த்து திரும்பிவிடுவார். இந்த தோட்டங்களில் அநியாயம், அக்கிரம், லஞ்சம், ஏமாற்றுத்தல் போன்ற காரியங்கள் நடைபெறுமானால், அந்த தோட்டக்கார்களை நியாயம் விசாரிப்பார். அவர் விரும்பும் கனி கொடுக்காத மரங்களை தவணை காலம் முடிந்தவுடன் வெட்டிப் போடுவார்!

Next...... என் நேசர்