மணவாளியின் விசித்திர அழகு

Previous......என் உத்தமியோ ஒருத்தி

மணவாளியின் விசித்திர அழகு

சுலேமேத்தியாளின் அழகை மணவாளன் புகழ்ந்ததைக் கேட்ட தோழிகள் சுலேமேத்தியாளை உற்றுப்பார்த்து அவளின் அழகை இவ்வாறு புகழ தொடங்குகிறார்கள். "சந்திரனைப்போல் அழகும், சூரியனைப்போல் பிரகாசமும், கொடிகள் பறக்கும் படையைப்போல் கெடியுமுள்ளவளாய், அருணோதயம்போல் உதிக்கிற இவள் யார்?" (உன்னதப்பாட்டு 6:10). மணவாளியே, உன்னைச் சுற்றிலுமுள்ள தேவ பிள்ளைகள் உனது ஆத்துமாவின் அழகை புகழ்கின்றனர். எப்படி சந்திரன் சூரியனின் கதிர்களிலிருந்து வெளிச்சத்தை எடுத்து பூமிக்கு கொடுக்கிறதோ, நீயும் நீதியின் சூரியனான கிறிஸ்துவினிடமிருந்து அவரின் மகிமையின் ஒளியை சாத்தானால் இருட்டடிக்கப்பட்ட இடங்களுக்கு கொண்டு போவாய். "சந்திரனைப்போலிருக்கும் உன் அழகை உனது ஊழியத்தின் மூலம் பயனடைந்த தேவமக்கள் புகழ்வார்கள். நீதியின் சூரியனான கிறிஸ்து உன்னில் வாசம் செய்வதால் நீயூம் அவரைப்போல் பிரகாசித்துக் கொண்டிருக்கிறாய்! வல்லமையின் ஆவியானவர் உன்னில் எல்லா வல்லமையோடு தங்கியிருக்கிறார். நீ கொடிகள் பறக்கும் படையைப்போல் கெடியுமுள்ளவள், உன்னிடம் கொடிகள் பறக்கும் ஒரு பெரிய ராஜரீக போர் சேனையே இருக்கின்றது! ஏன் பயந்து ஒதுங்குகின்றாய்?

Next..... மணவாளி வாதுமைத் தோட்டத்தில்