நேசருக்கு அருமையான கனிகள்

Previous....அழியும் தோட்டங்கள்

நேசருக்கு அருமையான கனிகள்

"தூதாயீம் பழம் வாசனை வீசும்; நமது வாசல்களண்டையிலே புதியவைகளும் பழையவைகளுமான சகலவித அருமையான கனிகளுமுண்டு; என் நேசரே! அவைகளை உமக்கு வைத்திருக்கிறேன்", என்று மணவாளி மணவாளனுக்கு கூறுகிறாள் (உன்னதப்பாட்டு 7:13).

இது மத்தியத்தரைக் கடற்கரைப் பகுதிகளில் வளரும் ஒரு வகையான செடியின் கனியாகும். இச்செடித் தண்டுகள் அற்றதும் நீள்வட்ட இலைகளை உடையதுமான தாவரமாகும். இச்செடியின் மலர்கள் ஊதா நிறமுடையதாகவும், பழுத்த கனிகள் செம்மஞ்சள் நிறமுடையதாகவும் இருக்கும். உன் தோட்டத்தில் சகலவித அருமையான கனிகள் கொடுக்கும் ஊழியர்கள் உண்டு. அதிக வாசனையுடைய இப்பழங்கள். இவர்கள் மூலம் இரட்சிக்கப்பட்ட ஆத்துமாக்கள் தூதாயீம் பழம் போல வாசனை கொடுப்பவர்கள். இவர்கள் உண்மையான இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்றவர்கள். இந்த பழங்களை கிறிஸ்து புசிக்க விரும்புகிறார்.


Next......மணவாளன் சகோதரனைப்போல