அடைக்கப்பட்ட தோட்டம்

Previous....மணவாளியின் உதடும், நாவும், ஆடைகளும்

அடைக்கப்பட்ட தோட்டம்

"என் சகோதரியே! என் மணவாளியே! நீ அடைக்கப்பட்ட தோட்டமும், மறைவு கட்டப்பட்ட நீரூற்றும், முத்திரிக்கப்பட்ட கிணறுமாயிருக்கிறாய்", என மணவாளன் மணவாளியை நோக்கிக் கூறுகிறார் (உன்னதப்பாட்டு 4:12).

மணவாளியே, பரிசுத்தாவியானவரால் நீ அடைக்கப்பட்ட தோட்டமுமாயிருக்கிறாய். பாவ வல்லமையிலிருந்தும், சாத்தானுடைய வல்லமையிலிருந்தும் அடைக்கப்பட்ட தோட்டம்! நீ இந்த தோட்டத்தில் அடைக்கப்பட்டிருக்கும்போது உன்னை பாவ சோதனை, தேவன் அனுமதிக்காமல், மேற்கொள்ளாது. சாத்தானும் இந்த வேலியை மீறி உன்னிடம் வரமுடியாது.

நீ மறைவு கட்டப்பட்ட நீரூற்று! உனது ஜீவ தண்ணீரை யாரும் திருடவோ, கறை படுத்தவோ முடியாது. நீ அனுமதித்தாலொழிய உன் பரிசுத்தத்தை யாராலும் திருட முடியாது.

நீ முத்திரிக்கப்பட்ட கிணறு! உனது கிணற்றிலிருந்து உனக்கு கொடுக்கப்பட்ட ஆசீர்வாதங்களை யாராலும் திருட முடியாது. உனக்கு ஆண்டவர் வைத்திருக்கும் ஆசிர்வாதங்கள் உனக்காக முத்திரிக்கப்பட்டது. உனக்கு ஆண்டவர் உனக்கென்று ஒதுக்கி வைத்திருக்கும் இடத்தை யாராலும் எடுக்கமுடியாது.

Next......மணவாளியின் தோட்டம்