லீலி புஷ்பங்களுக்குள்

Previous.....திராட்சத்தோட்டங்களில் நரிகள்

லீலி புஷ்பங்களுக்குள்

"என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவள். அவர் லீலி புஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார்" என்று மணவாட்டி தனது மணவாளனோடுள்ள தனிப்பட்ட, நெருங்கிய உறவைக்குறித்து படுகிறாள். (உன்னதப்பாட்டு 2:16). என் நேசர் என்னுடையவர்! இயேசு எந்த சபைக்கோ, நிறுவனத்திற்கோ அல்லது கிறித்துவ மதத்திற்கோ சொந்தமானவர் அல்ல. இவர்கள் அவரையோ அவரது நாமத்தையோ தங்களுக்கு அந்தரங்கமானவர் என்று விளக்கம் கோரலாம். எந்த ஒன்றுபட்ட நிறுவனத்திற்கோ இயேசுவை சொந்தமாக்கிக் கொள்ளமுடியாது. ஏனென்றால் இரட்சிப்பு ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு உரியதாகும். மாணவாளி, "என் நேசர், எங்களுடையவர்" என்று கூறாமல், "என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவள்" என கூறுகின்றாள். இன்று அநேகர் இயேசுவின் மூலமான இரட்சிப்பை தங்கள் சபைகளுக்கு சொந்தமாக்கிக் கொள்ளுகிறார்கள். ஆனால் அவர்கள் தனிப்பட்ட முறையில் அவரை சொந்தமாக்கிக் கொள்ளவில்லை. தங்கள் சபைகளில் போய் ஜெபித்தால் மாத்திரமே அவரது பிரசன்னத்தை உணர்கிறார்கள். கவலையுடன் சொல்வோமானால், "இயேசு என்னுடையவர், நான் அவருடையவள்/ர்" என்றோ, "அவரின் சுகமளித்தல் எனக்குத்தான் சொந்தம்" என்றோ, அவர்கள் கூறுவதில்லை. அவர் யார் என்று இன்னும் அறியவில்லை. இயேசுவை ஒரு சபையின் நான்கு சுவருக்குள்ளே தேடுகிறார்கள். அவருடன் ஒரு தனிப்பட்ட உறவு கிடையாது. "என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்.." (ஓசியா 4:6).

அவர் லீலி புஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார்! இயேசுவின் சீடர்கள் பள்ளத்தாக்குகளில் மலரும் லீலி புஷ்பங்களாகும். லீலி புஷ்பங்கள் வளர்வது, யாரும் காணமுடியாத, தாழ்ந்த, கடினமான பள்ளத்தாக்குகளில்தான்! இதேபோல, தங்களை துச்சமாக எண்ணி, தாழ்த்திக் காண்பிக்கும் இயேசுவின் சீடர்களின் மத்தியில் மணவாளனாகிய இயேசு மேய்கிறார். இயேசுக்கிறிஸ்துவின் இருப்பிடம் அவரது உண்மையான சீடர்கள் மத்தியில் தான். எந்த சபையின் நான்கு சுவர்களுக்குள்ளில் அல்ல. இந்த குழுவாகிய சீடர்கள் தான் அவரது சரீரமாகிய உண்மையான சபை. இந்த சபைக்குத்தான் தன் மகிமையை பகிர்ந்து கொள்கிறார்.

Next...... கலைமானும் மரைகளின் குட்டியும்