மாரி காலம்

Previous.....எழுந்து வா

மாரிகாலம்

"இதோ, மாரிகாலம் சென்றது, மழைபெய்து ஒழிந்தது.பூமியிலே புஷ்பங்கள் காணப்படுகிறது குருவிகள் பாடுங்காலம் வந்தது, காட்டுப்புறாவின் சத்தம் தேசத்தில் கேட்கப்படுகிறது.அத்திமரம் காய்காய்த்தது; திராட்சக்கொடிகள் பூப்பூத்து வாசனையும் பரிமளிக்கிறது; என் பிரியமே! என் ரூபவதியே! நீ எழுந்துவா", என்று மணவாளன் தனது மணவாட்டியை நோக்கிக் கூறுகிறார் ( உன்னதப்பாட்டு 2:11-13).இந்த பகுதி ஆத்தும மணவாளனின் நீடிய பெருமையையும், சாந்த தன்மையையும் காண்பிக்கிறது. மதிலுக்குப் பின்னால் அநேக காலம் காத்திருக்கிறார். தன் மணவாட்டியிடம் மென்மையாக குரலில் காத்திருந்து வீணாக போன காலங்களை ஞாபகப்படுத்துகிறார். மணவாட்டியே, நீ தானாகவே அவரின் மலர்ந்த முகத்தைக்கண்டு எழுந்து வரும்படி காத்துக்கொண்டிருக்கிறார். தெய்வீக எழுத்தாளர் ஒரு கம்பீரமான முறையில் காலங்களைக் காண்பித்து மணவாளன் காத்திருப்பதை வர்ணிக்கிறார்.

பச்சை தாவரங்களின் ராஜ்ஜியங்களில் , மிருகங்களின் ராஜ்ஜியங்களில் நடக்கும் காலத்தின் மாறுதல்களை இங்கே அருமையாக வர்ணிக்கிறார்.

பச்சை தாவரங்களின் ராஜ்ஜியங்களில், மிருகங்களின் ராஜ்ஜியங்களில் நடக்கும் காலத்தின் மாறுதல்களை இங்கே அருமையாக வர்ணிக்கிறார். மணவாட்டி காலம் கடத்துவதை இங்கே கொஞ்சம்கூட கண்டிக்காமல், அவளுக்கு ஞாபகமூட்டுகிறார். ஒரு தாய் தனது குழந்தைக்கு ஒரு கதையை விளக்கி சொல்லும்படி, அந்த குழந்தைக்கு அநேக பொருட்களைக் காண்பித்துப் புரிய வைக்கிறாள்.

தாயைப் போல, மணவாளன் இங்கே தனது மணவாட்டிக்கு புரிய வைக்கிறார். இது தான் அவரின் அன்பின் உச்சிதம்! "மாரிகாலம் சென்றது, மழைபெய்து ஒழிந்தது. பூமியிலே புஷ்பங்கள் காணப்படுகிறது குருவிகள் பாடுங்காலம் வந்தது, காட்டுப்புறாவின் சத்தம் தேசத்தில் கேட்கப்படுகிறது. அத்திமரம் காய்காய்த்தது; திராட்சக்கொடிகள் பூப்பூத்து வாசனையும் பரிமளிக்கிறது". சுவிசேஷங்களில், நமது பரம மேய்ப்பன் அநேக உவமானங்கள் மூலம் உண்மைகளைக் கற்றுக்கொடுக்கிறார்.

நமது தெய்வீக எழுத்தாளனின் கவிதை நயத்தை இங்கே காணலாம். மணவாட்டியே, நீ எழுந்து வராதலால் அநேக ஆசீர்வாதங்களை இழந்துவிட்டாய். இனியும் தாமதிக்காதே! "என் பிரியமே! என் ரூபவதியே! நீ எழுந்துவா".

Next..... என் புறாவே