மணவாளி வாதுமைத் தோட்டத்தில்

Previous...../மணவாளியின் விசித்திர அழகு

மணவாளி வாதுமைத் தோட்டத்தில்

"பள்ளத்தாக்கிலே பழுத்த கனிகளைப் பார்க்கவும், திராட்சச்செடிகள் துளிர்விட்டு, மாதளஞ்செடிகள் பூத்ததா என்று அறியவும், வாதுமைத் தோட்டத்துக்குப் போனேன்", என்று மணவாளி தோழிகளின் கேள்விக்கு உத்தரவு கொடுக்கிறாள் (உன்னதப்பாட்டு 6:11).

மணவாட்டியே, உனக்கு ஒரு வாதுமைத் தோட்டம் உண்டு. வாதுமை கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து உண்ணலாம். இந்த கடினமான தோட்டை உடைப்பது இலகுவானதல்ல. இந்த உலகத்தின் கடவுளான சாத்தான் கோடிக்கணக்கான மக்களைச் சுற்றிலும் தோடுகளைக் கட்டி கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷம் அவர்களிடம் சேராமல் தடை செய்துகொண்டிருக்கிறான். ஒவ்வொரு கிறிஸ்துவின் சீடனுக்கும் ஒரு வாதுமைத் தோட்டம் உண்டு. இருளின் பள்ளத்தாக்கிலே வளரும் கனிகள் கிறிஸ்துவுக்குத் தான் சொந்தம். சுவிசேடத்தின் மூலம் தோடுகளை உடைத்து பழங்களை எடுத்து கிறிஸ்துவுக்கு கொடுப்பது உன் பணியும் கடமையும் ஆகும். பள்ளத்தாக்கில் வளரும் திராட்சச்செடிகள், மாதளஞ்செடிகள், உலக மக்களின் கண்பார்வைகளில் விழாமலிருக்கிறது. ஆனால் உன் கண்களில் தெரிகின்றன. நீ இந்த செடிகளுக்கு நீர் ஊற்றி, உரம் போட்டு பராமரித்தால் தான் இவைகள் பூத்து கனி கொடுக்கும். உனது கண்ணீர் ஜெபங்களினால் சுவிசேஷம் மூலம் விதைக்கப்பட்ட விதைகள் முளைக்கும்படி செய்து அவைகள் வளர்ந்து செடியாகவும் மரமாகவும் ஆகச்செய்யும்.

விதை விதைக்கும் ஊழியனே நீ உடனே கனிகளை எதிர்பார்க்கமுடியாது. ஒரு விவசாயியைப்போல பொறுமையோடு காத்திரு. ஆனால் உன் தோட்டத்திற்குத் தினமும் போய்க்கொண்டிரு. உனது தோட்டக்காரன் இயேசுவே. நீ அவருடன் கூட வேலைபார்க்கும் சக ஊழியன். கண்டிப்பாக நீ கனிகளைக் காண்பாய்!

பூக்கள் பூக்கிறதா என்று கவனிக்கவும், பூச்சிகள் வந்து அழிக்கக்கூடும். விவசாய மருந்துகளை உபயோகிக்க வேண்டும். மொட்டு விரியும் பூக்களை வெட்டுக்கிளி அழிக்கக்கூடும். கள்ள சுவிசேஷம் உனது தோட்டத்திற்குள் வெட்டுக்கிளி போன்ற கள்ள போதகர்கள் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும். ஒரு நாள் இந்த செடிகளிலிருந்து திராட்சச் பழங்கள் துளிர்விட்டு, மாதளம் பழங்கள் போன்ற விசேஷித்த ஊழியர்கள் எழும்பக்கூடும். எல்லா விண்ணப்பங்களுடமும் எல்லா எச்சரிப்புகளுடன் மொட்டு விரியும் பூக்களை காத்துக்கொள்!

"சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.

.....ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்கமனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு, சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.

......நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று". 2 தீமோ 4:2-5).

Next..... அம்மினதாபின் இரதங்கள்