ரூபமுள்ளவர்

Previous....கண்கள் புறாக்கண்கள்

ரூபமுள்ளவர்

தனது மணவாளனின் நேசத்தால் மூழ்கி மணவாட்டி அவரை நோக்கி, " நீர் ரூபமுள்ளவர்; என் நேசரே! நீர் இன்பமானவர்; நம்முடைய மஞ்சம் பசுமையானது."என பாடுகிறாள் (உன்னதப்பாட்டு 1:16). நாம் யேசுக்கிறிஸ்துவை வணங்கி ஆராதிக்கிறோம் ஏனெனில் அவர் யார் என்றும் அவரை நாம் எவ்வாறு புரிந்திருக்கிறோம் என்றும் நன்கு அறிந்திருக்கிறோம்.உண்மையாகவே அவர் யுகயுகமாய், களங்கமில்லாத பூரண அழகுள்ளவர். "வானத்திலாவது, பூமியிலாவது, பூமியின் கீழாவது, ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறக்கவும், அதைப் பார்க்கவும் கூடாதிருந்தது.......இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார்...." (வெளி 5:3-7). ஆட்டுக்குட்டியானவரை தவிர, வேறு யாரும் தகுதியில்லாதவர்கள்! நாமும், "மகா சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் " என்று ஆராதிப்போமாக! (வெளி 5:12).

பதினைந்தாம் வசனத்துக்கும் பதினாறாம் வசனத்துக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. பதினைந்தாம் வசனமானது கருப்பாயிருக்கும் மணவாட்டியைக் குறித்து, "நீ ரூபவதி" என்று மணவாளன் கொடுக்கும் சாட்சியாகும். உண்மையை கூறுவோமானால், மணவாட்டி அவளது பார்வையில் அழகு இல்லாமல் கருப்பாக இருந்தாலும் தனது மணவாளனின் பார்வையில் ரூபவதியாக இருக்கிறாள். ஆனால் பதினாறாம் வசனம் மணவாட்டியானவள் மணவாளனைக் குறித்து "நீர் ரூபமுள்ளவர்" என்று கூறும் உண்மையான வாயின் அறிக்கையாகும்.

"நம்முடைய மஞ்சம் பசுமையானது", என மணவாட்டி ஆனந்தமடைகிறாள். ஆச்சரியத்திற்குரிய காரியம் என்னவெனில் தகுதிவாய்ந்த மணவாளன் தகுதியில்லாத மணவாட்டியுடன் தன் மஞ்சத்தை பகிர்ந்து கொள்கிறார். அவரின் மஞ்சம் "நம்முடைய" மஞ்சமாகிவிட்டது! அவரின் மஞ்சம் என்றால் கிருபை, இரக்கம், பரிசுத்தம் தங்குகின்ற அவரின் சொந்த மறைவிடம். இந்த மறைவிடத்தில் அவரின் அன்பையும், கிருபையையும், இரக்கத்தையும் நாம் அளவில்லாமல் பெற்றுக்கொள்ளலாம்.

Next.....நம்முடைய வீடு