சிறிய சகோதரி

Previous.....திரளான தண்ணீர்கள்

சிறிய சகோதரி

சூலமேத்தியாளுடைய சகோதரர்கள் இப்போது இந்த கட்டத்தில் தோன்றுகிறார்கள். அவளும், அவளின் சகோதரர்களும் அவர்களுடைய ஒரு சிறிய சகோதரியைப் பற்றி இவ்விதம் கூறுகின்றனர்: "நமக்கு ஒரு சிறிய சகோதரியுண்டு, அவளுக்கு ஸ்தனங்களில்லை; நம்முடைய சகோதரியைக் கேட்கும்நாளில் அவளுக்காக நாம் என்ன செய்வோம்?" (உன்னதப்பாட்டு 8:8). அவர்களுக்கு ஸ்தனங்களில்லாத சிறிய சகோதரியைப் குறித்து விசனமடைந்து அவள்மேல் விசேஷ கவனம் செலுத்துகிறார்கள்.

கிறிஸ்துவின் மணவாட்டியே, இன்று ஸ்தனங்களில்லாத சிறிய சகோதரியைப்போல ஆவிக்குரிய வாழ்க்கையில் சிறு குழந்தைகளாகவே இருக்கும் தேவமக்கள் உண்டு. அவர்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்ந்து கிறிஸ்துவின் சரீரமான சபையிலுள்ள இளம் விசுவாசிகளுக்கு ஆவிக்குரிய பாலான, அடிப்படை வேத வசனங்களை கொடுக்க முடியாமல் ஸ்தனங்களில்லாத சிறிய சகோதரியைப்போல நமது சபைகளில் நடைப் பிணங்களாக இருந்துகொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு அப்போஸ்தலர்களான மிஷனரிகளை குறித்து எந்தவிதமான பாரமோ, சுவிசேடம் அறியப்படாத இடங்களில் நடைபெறும் ஊழியங்களைக்குறித்தோ எந்தவிதமான அக்கறையோ கிடையாது. இப்படி ஸ்தனங்களில்லாத சிறிய சகோதரியைப்போல இருப்பவர்களைக்குறித்து சபை போதகர்களுக்கு எந்தவிதமான கவலையோ இல்லை. இடைவிடாத விண்ணப்ப ஜெபங்கள் செய்து சுவிசேஷ ஊழியர்களை தாங்கவும், ஏழை விசுவாசிகளையும், விதவைகளையும் பொருள் உதவி, பண உதவி செய்து தியாகமான ஊழியங்கள் செய்யவும், பால் ஊட்டி குழந்தைகளை வளர்க்கும் தாயைப்போல ஸ்தனங்கலுள்ள கிறிஸ்துவின் சீடர்கள் எங்கே?

Next......சிறிய சகோதரி ஒரு மதில், ஒரு கதவு