மணவாளனின் கலியாண நாள்

Previous.....லீபனோனின் மரத்தினால் ஒரு இரதம்

மணவாளனின் கலியாண நாள்

மணவாட்டி தன் தோழிகளை நோக்கி இவ்விதம் கூறுகிறாள்."சீயோன் குமாரத்திகளே! நீங்கள் புறப்பட்டுப்போய், ராஜாவாகிய சாலொமோனின் கலியாண நாளிலும், மனமகிழ்ச்சியின் நாளிலும், அவருடைய தாயார் அவருக்குச் சூட்டின முடியோடிருக்கிற அவரைப் பாருங்கள்" (உன்னதப்பாட்டு 3:11).எருசலேமின் குமாரத்திகள் இங்கே சீயோனின் குமாரத்திகள் என்று அழைக்கப்படுகிறார்கள். சீயோன் என்பது தேவன் ஆட்சி செய்யும் ஒரு தேசம். ராஜாவாகிய சாலொமோனின் கலியாண நாள் என்பது வெளிப்படுத்தலின் விசேஷத்தின் 12ம் அதிகாரத்தில் (வசனங்கள் 1 முதல் 5 வரை) எழுதப்பட்டிருக்கிறது. இங்கே ஒரு ஸ்திரீயானவளைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. பழைய ஏற்பாட்டின் இஸ்ரவேல் தான் இந்த ஸ்திரி! பிரசவவேதனைப்பட்டு அந்த ஸ்திரீ பிள்ளைபெற்றவுடனே (புதிய ஏற்பாட்டின் இரட்சகர்), அவளுடைய பிள்ளையைப் பட்சித்துப்போடும்படிக்கு அந்த வலுசர்ப்பம் அவளுக்கு முன்பாக நின்றது. இந்த பெண் பெற்ற ஆண் மகனான, நமது மணவாளன் கிறிஸ்து, தனது மணவாட்டியான சபையோடு திருமணம் செய்துகொள்வார். இந்த சம்பவம் கடைசி யுகத்தில் நடைபெறும். வெளிப்படுத்தலின் விசேஷத்தின் 21ம் அதிகாரத்தில் 2ம் வசனத்தில் இந்த கல்யாண நாளை பற்றி எழுதப்பட்டிருக்கிறது. "புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கிவரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது".

இந்த உன்னதப்பாட்டின் பகுதியில் நாம் சரித்திரத்தில் நடக்கும் யுகம் முடியும் நாட்களுக்குள் தீர்க்கதரிசனமாக அழைத்து செல்லப்படுகிறோம். அந்த நாளில் தாயாகிய இஸ்ரவேல் தேசம் இந்த கலியாண நாளையும் மனமகிழ்ச்சியின் நாளையும் கண்டு மகிழ்வாள்.

Next.....நீ ருபவதி