தாயின் வீடு

Previous.....மணவாளன் சகோதரனைப்போல

தாயின் வீடு

"நான் உம்மைக் கூட்டிக்கொண்டு, என் தாயின் வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோவேன்; நீர் என்னைப் போதிப்பீர், கந்தவர்க்கமிட்ட திராட்சரசத்தையும், என் மாதளம்பழரசத்தையும் உமக்குக் குடிக்கக்கொடுப்பேன்". (உன்னதப்பாட்டு 8:2).சூலமேத்தியாள் அரசன் சாலமோனை தனது சகோதரனாக பாவித்து தாயின் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போக விரும்புகிறாள். மணவாட்டியே. உனக்கு ஒரு தாய் வீடு உண்டு. ஆவிக்குரிய மறுபிறப்பில் உன்னை சுவிசேஷம் மூலம் பெற்றடுத்த ஒரு மூத்த தேவ தாசன் உண்டு. நீ கிறிஸ்துவிற்குள் பிறந்து, வளர்ந்து ஆளானதற்கு சில தேவமக்கள் தான் காரணம். இவர்கள் உன் தாய் வீட்டை சேர்ந்தவர்கள். இன்றோ தாய் வீடு பாழாகி கிடக்கிறது ஏனென்றால் அவர்களை அந்திக்கிறிஸ்துவானவன் வஞ்சித்து விட்டான். அநேக ஆண்டுகளுக்கு முன்பு நான் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்ந்த சபை, கல்வாரியில் தரிசனத்தை இழந்து பின்வாங்கிபோய்விட்டது. ஆவியானவர் அந்த சபையை விட்டுவிட்டு போய்விட்டார். நான் அவர்களுக்காக தொடர்ந்து ஜெபித்துவருவது உண்டு.

மணவாளியே, பின்மாற்றத்திலிருந்து மனம் திரும்பி, நீ மணவாளனை முற்றிலும் பின்பற்றும்போது, உன் தாயின் வீட்டிலுள்ளவர்கள் உன் மூலமாக நீ நன்கு அறிந்துகொண்ட மணவாளனை உண்மையாக அறியவும், பின்பற்றவும் உன்பின்னால் ஓடி வருவார்கள். உனக்கு போதிப்பது உன் நேசர்தான். கந்தவர்க்கமிட்ட திராட்சரசத்தையும், உன் மாதளம்பழரசத்தையும் அவருக்குக் குடிக்கக்கொடுப்பாய். இப்போது, திராட்சரசத்தையும், மாதளம்பழரசத்தையும் கொடுக்கும் உண்மையான ஊழியர்கள் மிகவும் குறைவு. கிறிஸ்துவின் இரத்தமான திராட்சரசத்தைக் கொடுத்து இரட்சிப்பிற்கு வழிநடத்தும் உண்மையான சுவிசேடர்கள் எங்கே? சரீரத்தை வியாதியிலிருந்து தடுக்கும் மாதளம்பழரசத்தை கொடுத்து பரிபூர்ணத்திற்கு வழிநடத்தும் உண்மையான தீர்க்கதரிசிகள் எங்கே? உனது ஊழியத்தின்மூலம் கிறிஸ்து கந்தவர்க்கமிட்ட திராட்சரசத்தையும், மாதளம்பழரசத்தையும் கிறிஸ்து தன் சரீரமான சபை மூலம் பருகுவார்.

Next.....மணவாளன் அணைத்து தேற்றுகிறார்