கலைமானும் மரைகளின் குட்டியும்

Previous....லீலி புஷ்பங்களுக்குள்

கலைமானும் மரைகளின் குட்டியும்

"என் நேசரே! பகல் குளிர்ச்சியாகி, நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும், நீர் திரும்பி, குன்றும் பிளப்புமான கன்மலைகளில் குதித்துவரும் கலைமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாயிரும்" என்று தன்னைவிட்டுப் பிரிந்துபோன மணவாளனை தன்னிடம் சீக்கிரம் வரும்படி வேண்டுகிறாள் (உன்னதப்பாட்டு 2:17).

தன்னைவிட்டு மணவாளன் தற்காலிகமாக விலக்கிக்கொண்டதும், மணவாட்டி அவரது வெற்றிடத்தை உணர்ந்து, இரவு வரப்போவதை அறிந்து பயம்கொள்கிறாள். பெத்தேர் மலைகளின் வசிக்கும் கலைமானைப் பற்றியும், மரைகளின் குட்டியைப் பற்றியும், ஆங்கில பதிப்பில் இந்த வசனத்தில் எழுதப்பட்டிருக்கிறது. பெத்தேர் (Bether) என்றால் ஆவிக்குரிய அர்த்தம் என்னவென்றால் "பிரிந்திருத்தல்" என்பதாகும். இந்த குன்றும் பிளப்புமான கன்மலைகள், மணவாளனையும் மணவாட்டியையும் பிரிக்கிறது.

மணவாட்டியே, நீயும் உன் ஆத்தும மணவாளனைப் பிரிந்து இருக்கக்கூடும். பகல் குளிர்ச்சியாகி இரவு அணுகையில் நீ பயந்து நடுங்கிக் கொண்டிருக்கலாம்.

அவரின் மேலுள்ள விசுவாசம் முற்றிலும் செத்துப் போயிருக்கலாம். சாத்தானின் கெர்ச்சிக்கும் குரலை மாத்திரம் இப்போது கேட்கிறாய். உனது அன்பார்ந்தவர் மரித்துவிடுவார் என்று அவன் கூறும் பொய்யை நம்பி, பயந்து கொண்டிருக்கலாம்.

நீ இப்போது அவர் உன்னிடம் தாமதமின்றி வரும்படி வேண்டவேண்டும். "இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும் .... இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும்" (சங்கீதம் 91:5,6) அவர் உன்னை விடுவிப்பார். உனது மணவாளன் பெத்தேர் கன்மலைகளிலிருந்து கலைமானைப் போல, மரைகளின் குட்டியைப் போல குதித்துவரும்படி காத்துக்கொண்டிருக்கிறார். உனது அழைப்பை எதிர் நோக்கியிருக்கிறார். இரவின் மேகங்கள் உனது விசுவாசத்தை மூடுகிறது. உனது இதயத் துடிப்பை அவர் கேட்டுக்கொண்டு, உன்னிடம் விரைந்து வரும்படி காத்துக்கொண்டிருக்கிறார்.

அவரின் ஆழமில்லாத, உன்னதத்தில் உயர்ந்து நிற்கும் நேசம் கன்மலைகளைத் தாண்டி உன்னிடம் ஓடி வருகிறது. ஹோலாண்டைச் சேர்ந்த காரி டென் பூம் (Corrie Ten Bom) அம்மையார் இரண்டாம் உலக மகா யுத்தத்தின் சமயம், கட்டுக்கடங்கான துன்பங்களை அனுபவிக்கும் அநேக யூதர்களை ஹிட்லரின் கைகளிலிருந்து காக்கும்படி தனது வீட்டில் யாருக்கும் தெரியாமல் அடைத்து வைத்து பராமரித்தார்கள். அதன் விளைவாக அவர்களும் அவர் தகப்பனாரும் சகோதரியும் சிறையில் அடைக்கப்பட்டார்கள். தனது பிள்ளைகளை பிரிந்து சிறையில் அநேக நாட்கள் அடிக்கப்பட்டு இருந்தார்கள். பின்பு, தகப்பனாரும் சகோதரியும் இருவரும் சிறைச்சாலையில் இறந்துவிட, அம்மையார் தேவன் மேலுள்ள நம்பிக்கையை இழந்து சிறையில் அடைபட்டு கிடக்க, இயேசுக்கிறிஸ்துவின் நேசமானது சிறைச்சாலைகளில் மதிலைத் துளைத்து அவர்களிடம் வந்து சேர்ந்தது.

அருமையான மணவாட்டியே, தொடர்ந்து காணப்படும் கன்மலைகளைக் குறித்து பயப்படவேண்டாம். நீ இப்போது மகிழ்ந்து களிகூர வேண்டும் ஏனென்றால் உனது மேய்ப்பன் உனது இதயத் துடிப்பை கேட்டுக்கொண்டு உனது அழைப்பிற்காக காத்துக்கொண்டிருக்கிறார். இரவு வரும் முன்பே அவரை அழைத்துவிட்டு!

Next.....ஆத்தும நேசரைக் காணவில்லை