மணவாட்டியை விழிக்கப்பண்ணாமல்

Previous.....ஆத்தும நேசரைக் கண்டேன்

மணவாட்டியை விழிக்கப்பண்ணாமல்

"எருசலேமின் குமாரத்திகளே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும் நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலுமிருக்கும்படி வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் உங்களை ஆணையிடுகிறேன்," என்று மணவாளன் எருசலேமின் குமாரத்திகளுக்கு தனது மணவாட்டியின் மேலே வைத்திருக்கும் நேசத்தையும், அக்கறையையும் பற்றி கூறுகிறார் (உன்னதப்பாட்டு 3:5). மனம்சோர்ந்த மணவாட்டியை, மணவாளனின் நேசத்தை அனுபவிக்க விடாமல் தடுக்கும், அவளது தோழிகளுக்கு அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலுமிருக்கும்படி ஆணையிடுகிறார். மணவாளன், அவள்மேல் அளவில்லாத நேசத்தை வற்றாத நீருற்றைப் போல பொழிகிறார். மணவாளன்தான் மணவாட்டியின் நிலையை அறிந்து புரிந்துக்கொள்கிறார். ஆனால் அவளது தோழிகளோ அவளைப் புரிந்துக்கொள்ளாமல் மணவாளனின் அன்பை அனுபவிக்க அவளுக்கு இடையூறு உண்டுபண்ணுகிறார்கள். ஆண்டவர் தனக்கென்று சுயநலம் கருதாமல் உழைக்கும் ஒரு நம்பிக்கையற்ற, மனமுடைந்த தேவ ஊழியரை தன் அன்பின் கயத்தால் இழுத்துக்கொண்டு அன்பை பொழிகிறார். அந்த ஊழியரின் சேவைகளை பெறும் தேவ மக்கள் அவரின் நலத்தை நாடாமல் அவரின் சேவைகளை மாத்திரம் நாடுகிறார்கள். ஆனால் ஆண்டவரோ தன் ஊழியனின் நலனை விரும்புகிறார். ஆண்டவரோ தன் கைகளினால் தனது அன்பார்ந்த ஊழியனுக்கு சேவை செய்கிறார். சேவைகளை நாடும் மக்களை தனது மணவாட்டியான ஊழியனை அவரின் அன்பில் மூள்வதை தடுக்கும்போது அவர்களுக்கு வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் அவர் ஆணையிடுகிறார். அந்த ஊழியனை அவரின் நேசத்திலிருந்து விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலுமிருக்கும்படி விரும்புகிறார்.

ஏன் மணவாளன் இந்த வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் ஆணையிடுகிறார்? அவரின் ஆணை இந்த மிருகங்களின் குணங்களைப்போல மென்மையாகவும். தாழ்மையாவும் இருக்கிறது. பரிசுத்தாவியானவர் மென்மையானவரும் தாழ்மையானவரும் ஆகும்.

இந்த மிருகங்களை உதாரணமாக காண்பித்தல் உன்னதப்பாட்டின் ஆக்கியோனின் கவிதை நயத்தை காண்பிக்கிறது.

Next......வனாந்தரத்திலிருந்து வருகிறவர்