மணவாட்டியின் கழுத்து

Previous.....மணவாட்டியின் உதடும் கன்னங்களும்

மணவாட்டியின் கழுத்து

உன் கழுத்து, பராக்கிரமசாலிகளின் கேடகங்களாகிய ஆயிரம் பரிசைகள் தூக்கியிருக்கிற ஆயுதசாலையாக்கப்பட்ட தாவீதின் கோபுரம்போலிருக்கிறது", என்று மணவாளன், பயத்தில் எதிர்மறையான எண்ணங்களைக் கொண்ட மணவாட்டியை இவ்விதம் ஆறுதல்படுத்தி அவளது கழுத்தை வர்ணிக்கிறார் (உன்னதப்பாட்டு 4:4). அவளது கழுத்தை தாவீதின் கோபுரத்திற்கு ஒப்பிடுகிறார். தாவீதின் கோபுரத்தில் போர் வீரர்களின் ஆயிரம் கேடகங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. தாவீது ராஜா போரில் பெலிஸ்தியரை மேற்கொள்ள இந்த போர்த் தளவாடக் கிடங்கு உதவியது.

மணவாட்டியே, நீ ஒரு தேவ வல்லமையால் நிரப்பப்பட்ட ஒரு போர்வீரன். உன்னால் சாத்தானின் ராஜியத்தை இருபுறம் கருக்குள்ள படடயத்தாலும், ஜெப தூபத்தாலும் அழிக்கமுடியும். உன் கழுத்தை உயர்த்தி உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவரை நோக்கிப் பார்க்கவும் (ஏசாயா 6:1). எப்போதும் உன் கழுத்து நிமிர்ந்து இருக்கவேண்டும். துன்ப கஷ்ட நேரங்களில் கழுத்தை உயர்த்தி பாலோகத்தை நோக்கி உயர்த்தவும்.

Next.....மணவாட்டியின் மார்பகம்