வெள்ளைப்போளச் செண்டு

Previous..மணவாட்டியின் நளததைலம் ,

வெள்ளைப்போளச் செண்டு

தனது அன்பான மணவாளனின் பிரசன்னத்தை இழந்த மணவாட்டி, அவருடைய மர்மமான, தனித்தன்மை வாய்ந்த ஆள்தத்துவத்தை நினைவு கூர்ந்து, தன் தோழிகளிடம், "என் நேசர் எனக்கு என் ஸ்தனங்களின் நடுவில் தங்கும் வெள்ளைப்போளச் செண்டு" என்று பாடுகிறாள் (உன்னதப்பாட்டு 1 :13). நற்கந்தத்தை பரப்பும் இந்த வெள்ளைப்போளச் செண்டு ஒரு விசேஷித்த செடியின் மரப்பட்டையிலிருந்து எடுக்கப்படுகிறது. யேசுக்கிறிஸ்துவின் சரீரம் சிலுவையில் அறையப்பட்டவுடன் இந்த வெள்ளைப்போளச் செண்டு வெளிப்பட்டு ஒரு நற்கந்தமாக தேவனைப்பற்றிய அறிவையையும் அவரது பரிசுத்தத்தையும் பரப்புகிறது.

இந்த வெள்ளைப்போளச் செண்டாகிய மணவாளன் தன் மணவாளியின் மடியில் படுத்து அவளின் அன்பை ருசிக்கின்றார். இது, மணவாட்டியினோடு மணவாளனின் வைத்திருக்கும் தனிப்படட உறவை வெளிப்படுத்துகிறது. கிறிஸ்துவின் சரீரத்தில் தங்களின் தியாகத்தால் கண்ணீரோடும், ரத்தம் வடித்து ஊழியம் செய்பவர்கள் ஒரு பாலூட்டி பிள்ளைகளை வளர்க்கும் தாயுக்கு ஒப்பானவர்கள். இந்த சுயநலமற்ற ஊழியர்களின் மடியில் மணவாளனாகிய கிறிஸ்து இருக்க விரும்புகிறார்.

Next....மருதோன்றிப் பூங்கொத்து