கிராமங்களில் தங்குவோம்

Previous.....நான் என் நேசருடையவள்

கிராமங்களில் தங்குவோம்

"வாரும் என் நேசரே! வயல்வெளியில் போய், கிராமங்களில் தங்குவோம்", என்று மணவாட்டி மணவாளனை வயல்வெளிக்கு அழைக்கிறாள் (உன்னதப்பாட்டு 7:11).

இந்த உலகம்தான் வயல்வெளி! மனம்திரும்பிய மணவாட்டி தன் மணவாளனை வயல்வெளியில் போய், கிராமங்களில் தங்குவோம் என கூறுகிறாள். இன்று அநேக சுவிசேடகர்கள் பட்டினங்களிலும், பசுமை நிறைந்த வெளிநாடுகளில் போய் ஊழியம் செய்ய விரும்புகிறார்கள். சுவிசேஷம் அறிவிக்கப்படாத கிராமங்களில் போய் அவர்கள் ஸ்தாபனங்கள் அமைக்க விரும்ப மாட்டார்கள். தமிழ்நாட்டில் ஒரு பட்டணத்திலே ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு சபை! கிராமங்களில் போய் அங்கேயே தங்கியிருந்து ஊழியம் பண்ணும் உத்தம ஊழியர்கள் நம் மத்தியில் உண்டு. அவர்களின் பெயர்களை நாம் அறியோம்.

உலகத்தின் எல்லா பகுதிகளிலும் போய் சுவிசேஷம் அறிவிக்கும்படி கிறிஸ்து நமக்கு கொடுத்த கட்டளை கொடுத்திருக்கின்றார். ஆனால் இங்கே மணவாட்டி கிறிஸ்துவான மணவாளனை வயல்வெளியில் போய், கிராமங்களில் தங்கும்படி வருந்தி அழைக்கிறாள். நம்முடைய ஒரே ஜெபமோ இப்படித்தான் இருக்கவேண்டும். நாம் அவரை அழைத்துக்கொண்டு இந்த பகுதிகளில் செல்லவேண்டும்.

Next.....அழியும் தோட்டங்கள்