மணவாளன் சகோதரனைப்போல

Previous....நேசருக்கு அருமையான கனிகள்

மணவாளன் சகோதரனைப்போல

"ஆ, நீர் என் தாயின் பால்குடித்த என் சகோதரனைப்போலிருந்தீரானால், நான் உம்மை வெளியிலே சந்தித்து முத்தமிடுவேன்; என்னை நிந்திக்கவுமாட்டார்கள்", என்று மணவாளி மணவாளனை தன் சகோதரனாக கருதி இவ்வாறு கூறுகிறாள் (உன்னதப்பாட்டு 8:1).சூலமேத்தியாள் அரசன் சாலமோனை தனது தாயின் பாலை குடிக்கும் சொந்த சகோதரனாகவும் இருக்க விருப்புகிறாள். தனது மணவாளன் சொந்த சகோதரனாக இருந்து அவளுக்கு முத்தம் கொடுத்தால் அவன் மேலே அவள் குற்றம் கண்டுபிடிக்க மாட்டாளாம்!. சூலமேத்தியாள் தனது மணவாளனை சொந்த சகோதரனாக கருதி அவனுக்கு சகோதர முத்தம் கொடுக்க விரும்புகிறாள். இது ஒரு பாலியல் உறவின் முத்தம் இல்லை. எழுத்தாளர்கள் இந்த புத்தகத்தை வெறும் கணவன் மனைவிக்கும் உள்ள பாலிய உறவை முக்கியப்படுத்தி விளக்குதல் கொடுக்கிறார்கள். இது ஒரு ஆன்மிக புத்தகம். கொஞ்சம்கூட பாலிய இச்சையை தூண்டும் எந்த விதமான சம்பவமோ இந்த புத்தகத்தில் கிடையாது. ஆண் பெண்ணின் நெருங்கிய தாம்பத்திய உறவை ஒரு உதாரணமாக வைத்து கிறிஸ்துவுக்கும் அவரது சீடருக்கும் நிலுவையில் உள்ள ஆழ்ந்த ஆத்மீக உறவை வெளிப்படுத்துகிறது. நமது அறிவுக்கு எட்டும்படியாக, புரிந்துகொள்ளும்படியாக தாம்பத்திய உறவை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட ஒரு உன்னத ஆன்மிக புத்தகம். இந்த புத்தகத்தை மாமிச சிந்தையோட தியானிக்கக்கூடாது. முத்தம் என்பதை முதலாம் அதிகாரத்திலே விளக்கம் கொடுத்துள்ளேன்.

Next.....தாயின் வீடு