மரத்தின் நிழலில்

Previous......கிச்சிலிமரம்

மரத்தின் நிழலில்

"அதின் நிழலிலே வாஞ்சையாய் உட்காருகிறேன், அதின் கனி என் வாய்க்கு மதுரமாயிருக்கிறது" என்ற வாக்கு எவ்வளவு உண்மை! (உன்னதப்பாட்டு 2:3). மணவாளனின் நிழலிலே ஒரு சோர்ந்துபோன பயணிக்கு பாதுகாப்பும், அரவணைப்பும் கிடைக்கிறது. கிச்சிலி மரம் தான் கிச்சிலி பழம் தருகின்றது. கிச்சிலி மரம் உண்மையான ஆசிர்வாதங்களுக்கு ஊற்றாகும். இதுதான் ஜீவாதிபதியினிடமிருந்து வரும் தெய்வீக சுகம். உங்களின் சரீரம் மாத்திரம் அல்ல. உங்களின் ஆத்துமாவிற்கு வேண்டிய பலனும்,இரட்சிப்பும், கிடைக்கிறது. சாத்தானின் அற்புதத்தால் சரீர சுகம் மாத்திரம் கிடைக்கலாம். உங்களிடம் ஒருவன் வந்து சரீர சுகம், பணம், அற்புதங்கள் போன்ற போலியான ஆசீர்வாதங்களை கொண்டுவரலாம். இந்த ஆசிர்வாதங்கள் கிறிஸ்துவிடமிருந்து வருகிறதல்ல! அவரது நிழலிலே வாஞ்சையாய் உட்காரும்போதுதான் உண்மையான பரம ஆசிர்வாதங்கள் கிடைக்கிறது.

அவருடைய பழம் உனது சுவைக்கு ஏற்றதாக இருக்கும். உனது தனிப்பட்ட, வித்தியாசமான, வேறு யாரும் புரிந்துகொள்ளமுடியாத சுவைக்கு ஏற்றவாறு தனது பழத்தை தருகிறார். நீ வாழ்கின்ற சூழ்நிலைகளை நன்கு அறிவார். நீ அவரிடமிருந்து இந்த விதமான பழத்தை விரும்புகிறாயா? அப்படியானால், நீ இன்று எழுந்திருந்து கிச்சிலி மரத்தை மாத்திரம் நாடிச் செல்லவும். அவரின் பிரத்தியமான குரலை நீ திட்டத்தெளிவாக கேட்கக்கூடும். மணவாளியாகிய நீ மாத்திரம் தான் இந்த குரலை கேட்பாய்.

Next......விருந்து சாலை