மணவாளி ஒரு மதில்

Previous.....சிறிய சகோதரி ஒரு மதில், ஒரு கதவு

மணவாளி ஒரு மதில்

"நான் மதில்தான், என் ஸ்தனங்கள் கோபுரங்கள்; அவருடைய கண்களில் கடாட்சம்பெறலானேன்" என்று சூலமேத்தியாள் தன் தோழிகளிடம் கூறுகிறாள் (உன்னதப்பாட்டு 8:10). சூலமேத்தியாள் இப்போது தானே ஒரு மதில் என்று சாட்சி கூறுகிறாள். மனம்திரும்பிய மணவாளி ஒரு பலமான மதிலாக தேவனது வீட்டில் இருக்கிறாள். இந்த மதிலை உடைத்து அந்திக்கிறிஸ்து, கிறிஸ்துவின் சரீரமான சபையில் பிரவேசிக்க முடியாது. அவளது ஸ்தனங்கள் கிறிஸ்துவின் சரீரமான சபைக்கு வேண்டிய ஆவிக்குரிய பாலை வற்றாமல் கொடுக்கிறது. இவளது தியாகமாக செய்துவரும் பணிகள், மணவாளனின் கண்களில் தயவு கிடைக்கப் பண்ணியது.

இன்று கள்ள உபதேசம், தற்பெருமை, பணத்தாசை, பண வசூல், சுய விளம்பரம், மனிதரின் பாராட்டு, சுயநலம் போன்ற காரியங்களினால் தேவனுடைய வீட்டின் மதில் பலனடைந்து விடுகிறது.

மணவாளியே, நீ ஒரு வல்லமையுள்ள மதிலாக, தேவனுடைய வீட்டைப் பாதுகாக்கவேண்டும். உனது ஸ்தனங்கள் உனது சிறிய சகோதரி போல இல்லாமல், கோபுரங்கள் போல காட்சியளிக்கிறது. வெறுமனே இரட்சிப்பின் அனுபவம், தண்ணீர் ஞானஸ்னானம், பரிசுத்தாவியின் அபிஷேகம், சபை கூடுதல் மாத்திரம் இருந்தால் போதாது. நீ தேவனுடைய வீட்டில் ஒரு பாதுகாப்பளிக்கும் அரணாக இருக்கவேண்டும். அப்போதுதான் மணவாளனின் கண்களில் கடாட்சம் பெறுவாய்!

Next..... மணவாளனின் திராட்சத்தோட்டம்