என் நேசர்

"நான் என் நேசருடையவள், என் நேசர் என்னுடையவர்; அவர் லீலிபுஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார்", என்று மணவாட்டி எருசலேமின் குமாரத்திகளுக்கு சொல்கிறாள் (உன்னதப்பாட்டு 6:3). "நான் என் நேசருடையவள்"! நீ அவருடையவன்/அவருடையவள் மாத்திரமே! நீ அவருடைய ராஜதூதன். ஆகவே நீ இயேசுவை மாத்திரம் பிரதிநிதியாக நில்! "என் நேசர் என்னுடையவர்"! இயேசு எந்த சபைக்கோ, குழுக்கோ அல்லது மதத்திற்கோ சொந்தமல்ல. யாரும், "அவர் எங்களுக்கே" என்று எந்த கூட்டமோ சொந்தம் கொண்டாடினால், அது சரியாக பொருந்தாது. உன்னதப்பாட்டின் மணவாளி தோழிகளுடன் சேர்ந்து, "அவர் நமக்கே" என்று சொல்லவில்லை. "நான் என் நேசருடையவள், என் நேசர் என்னுடையவர்; அவர் லீலிபுஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார்", என்று மணவாட்டி எருசலேமின் குமாரத்திகளுக்கு சொல்கிறாள். (உன்னதப்பாட்டு 6:3). இன்று அநேக கிறிஸ்தவர்கள் "கிறிஸ்து கொடுக்கும் இரட்சிப்பு எனக்கே அல்லது அவர் தரும் சரீர சுகம் எனக்கே" என்று மேன்மை பாராட்டுகிறார்கள். வாயின் மூலம் இது போல அறிக்கை செய்யவேண்டும் என்று போதகர்கள் நமக்குப் போதிக்கிறார்கள். ஆனால், "என் நேசர் என்னுடையவர்" என்று வாயின் மூலம் அறிக்கை செய்ய நமக்கு போதனை கொடுக்கப்படவில்லை. "என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்" (ஓசியா 4:6). இயேசுவைக் குறித்து அறிவில்லாமல் நாம் சங்காரமாகிறோம். இந்த தீர்க்கதரிசனம் இப்போது நிறைவாகுகிறது.

அவர் லீலிபுஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார்! லீலிபுஷ்பங்களுள் வளர்வது பள்ளத்தாக்குகளில்தான்! இயேசுவின் உண்மையான சீடர்களும் ஊழியர்களும் வளர்வது ஆழமான பள்ளத்தாக்குகளில்தான்! துன்பங்களும், போராட்டங்களும் நிறைந்த பள்ளத்தாக்குகள்! இந்த பள்ளத்தாக்குகளில் லீலிபுஷ்பங்களாக திகழ்கிறார்கள்.

Next......மணவாளியின் சௌந்தரியம்