மணவாளியின் மயக்கும் கண்கள்

Previous......மணவாளியின் சௌந்தரியம்

மணவாளியின் மயக்கும் கண்கள்

"உன் கண்களை என்னைவிட்டுத் திருப்பு, அவைகள் என்னை வென்றது; உன் அளகபாரம் கீலேயாத் மலையிலே தழைமேயும் வெள்ளாட்டு மந்தையைப்போலிருக்கிறது", என்று மணவாளன் தன் மணவாளியின் அழகை புகழ்கிறார் (உன்னதப்பாட்டு 6:5).கிறிஸ்து உன்னோடு உறவாட விரும்புகிறார். நீ அவரை ஜெப தியானத்தில் காணும்போது அவர் ஆனந்தத்தால் மகிழ்வார். உன் கண்கள் அவரை மேற்கொண்டது! நீ தளர்ச்சியில்லாமல், ஊக்கத்தோடு ஜெபிக்க முடியாவிட்டாலும் ஆண்டவர் உனது அநேக பிரார்த்தனைகளை ஏற்றுக்கொண்டு பதிலளித்துவிட்டார். ஏனென்றால் உன் கண்கள் அவரை கவர்ந்துவிட்டது. உனக்காக ஒரு தேவ ஊழியர் ஜெபித்தால் தான் தேவன் உன்னை ஆசீர்வதிப்பார் என்று எண்ணவேண்டாம். இயேசு உன்னை தனிப்பட்டவிதமாக நேசிக்கிறார். உனது இதயத்துடிப்பை அறிகிறார். அவர் உன் குரலைக்கேட்டு, உன் முகத்தைக் காண்கிறார். ஒரு ஊழியனைத் தேடி ஓடவேண்டாம்.

கிறிஸ்து தன் மகிமையால் உன்னை மூடுகிறது. உ ன் அளகபாரம் கிறிஸ்துவிடமிருந்து வருகிறது. பிதா குமாரனுக்குத் தந்த மகிமையை குமாரன் உனக்கு கொடுத்திருக்கிறார் (யோ 17:22). உனது மகிமை கீலேயாத் மலையிலே தழைமேயும் வெள்ளாட்டு மந்தையைப்போலிருக்கிறது. இந்த வெள்ளாட்டு மந்தையின் அழகான கம்பளி முடி நம்மை மூடும் கிறிஸ்துவின் மகிமைக்கு ஒப்பாகிறது. ஒவ்வொரு வெள்ளாடும் தனியாக காட்சியளிக்காமல் ஒரு மந்தையையாக காட்சியளிக்கிறது. கிறிஸ்துவின் சரீரமாகிய சபைக்கும் தனித்தனி மனிதர்களை வெளிப்படுத்தாமல், ஒரே மந்தையாக அவரின் மகிமையை வெளிப்படுத்துகிறது.

கீலேயாத் மலைகளிலிருந்து கிதியோன் இஸ்ரவேல் மக்களில் முகுந்த சிலரை தேர்ந்தெடுத்து மீதியானியரை தோற்கடித்தான் (நியா 7:3). இன்று கிறிஸ்து விரும்புவது ஒரு திரளான மக்கள் கூட்டத்தை அல்ல. கிறிஸ்துவிற்காக தங்களை முற்றிலும் அர்ப்பணித்த ஒரு சிறிய கூட்டத்தார் தான் இந்த உலகில் கிறிஸ்துவின் மகிமையை வெளிப்படுத்துகிறார்கள்.

Next...... மணவாளியின் பற்கள்