மனமகிழ்ச்சியை உண்டாக்கும் மணவாளி

Previous....மணவாளியின் கழுத்து, கண்கள், மூக்கு

மனமகிழ்ச்சியை உண்டாக்கும் மணவாளி

"மனமகிழ்ச்சியை உண்டாக்கும் என் பிரியமே! நீ எவ்வளவு ரூபவதி, நீ எவ்வளவு இன்பமுள்ளவள்", என்று மணவாளன் தன் மணவாளியின் அழகைப் புகழ்ந்து பாடுகிறார் (உன்னதப்பாட்டு 7:6).

இயேசு, உன் மணவாளன், நீ அவருடைய பார்வையில் மிகுந்த அழகாக இருப்பதாக சாட்சி கூறுகிறார். இந்த உலகம் அழகுப் போட்டியில் பங்கு கொள்ளும் அழகிகளை அழகு ராணிகள் என்று புகழ்கிறார்கள். ஆனால் கிறிஸ்துவோ கிறிஸ்தவ உலகில் இந்த அழகுப் போட்டியை வைத்து தனது மணவாளியை மகா அழகியாக தேர்ந்தெடுக்கிறார். இந்த மணவாட்டியின் விசேஷித்த குணாதிசயங்கள் என்னவென்று நாம் உன்னதப்பாட்டின் புத்தகத்தில் படித்தறிகிறோம். மணவாளன் தனது கண்ணாடியை மணவாளியின் முன்னால் பிடித்து, "என் பிரியமே! நீ எவ்வளவு ரூபவதி, நீ எவ்வளவு இன்பமுள்ளவள்", என்று கூறுகிறார். "நீ எவ்வளவு ரூபவதி" என்று உனது அழகை அளக்கும்படி அவர் தனது அளவுகோலை உபயோகிக்கிறார். நீ எவ்வளவு இன்பமுள்ளவள் என்று நீ அவர்மேல் வைத்திருக்கும் அன்பையும், உறவையும் அவர் தனது அளவுகோலை உபயோகிக்கிறார். வேறு எந்த மனிதனாலும் இந்த அளவுகோலை உபயோகிக்கமுடியாது. நீ தான் அவரின் பிரியம்! நீ தான் அவரின் இன்பம்!

Next..... மணவாளியின் உயரமும், ஸ்தனங்களும்