வனாந்தரத்திலிருந்து வருகிற மணவாளி

Previous.....மணவாளன் அணைத்து தேற்றுகிறார்

வனாந்தரத்திலிருந்து வருகிற மணவாளி

"தன் நேசர்மேல் சார்ந்துகொண்டு வனாந்தரத்திலிருந்து வருகிற இவள் யார்? கிச்சிலிமரத்தின் கீழ் உம்மை எழுப்பினேன்; அங்கே உமது தாய் உம்மைப் பெற்றாள்; அங்கே உம்மைப் பெற்றவள் வேதனைப்பட்டு உம்மைப் பெற்றாள்", என்று ஒரு மூன்றாம் நபர், சூலமேத்தியாள் சாலொமோன் ராஜாவின் தோளில் சாய்ந்துகொண்டு வனாந்தரத்திலிருந்து வருகிறாள் என சாட்சி கூறுகிறார் (உன்னதப்பாட்டு 8:5).

இங்கே ஒரு மூன்றாம் நபர் நீங்கள் கிறிஸ்துவுக்குள் மறுபிறப்பு அடைந்ததை சாட்சியாக அறிவிக்கிறார். உங்களை பெற்றெடுக்கும்படி ஒரு தேவபிள்ளை கர்ப்ப வேதனைப்பட்டு உங்களை கிறிஸ்த்துவிற்குள் கொண்டு வந்திருக்கின்றார். கிறிஸ்துவாகிய கிச்சிலிமரத்தின் கீழ் உங்களை இந்த தேவபிள்ளை உயிருடன் ஆத்துமாவில் எழுப்பியிருக்கிறார். இந்த நபரை நீங்கள் சாகும்வரை மறக்கக்கூடாது.

உங்களது சாட்சி மாத்திரம் போதாது. உங்களது கிறிஸ்தவ வாழ்க்கையைப்பார்த்து சாட்சி அளிக்கவேண்டும். இந்த வனாந்தரமான உலகில் உங்களுக்கு யாருமே இல்லை. எல்லாரும் உங்களைவிட்டு கடந்து போவார்கள். ஆனால் உங்களது ஆத்ம மணவாளன் உங்களோடு கூட இருப்பார். அவரை மாத்திரம் சார்ந்து இருக்க கற்றுக்கொள்ளவேண்டும்.

Next..... இருதய, புயத்தின் முத்திரைகள்