மணவாளியின் கன்னங்கள்

Previous......மணவாளியின் பற்கள்

மணவாளியின் கன்னங்கள்

"உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதளம்பழம் போலிருக்கிறது", என்று மணவாளன் தன் மணவாளியின் கன்னங்களை புகழ்ந்து பாடுகிறார் (உன்னதப்பாட்டு 6:7).உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதளம் பழம்போலிருக்கிறது.பெண்ணின் முக்காடு அவளின் அடக்கத்தையும் தாழ்மை நிலையையும் குறிக்கிறது. தன்னை கிறிஸ்துவுக்குள் மறைத்துக்கொள்ளும் ஒவ்வொரு தேவ பிள்ளையை, கர்த்தர் கனம் பண்ணுகிறார். அந்த ஆத்மீக முக்காட்டிற்குள்தான் மணவாட்டியின் கன்னங்கள் வெடித்த மாதளம் பழம்போலிருக்கிறது. மாதளம் பழத்தை காப்பது அதன் கடினமான தோடு தான். ஆங்கிலத்தில் இதை Temples என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது தலையின் கீழேயுள்ள பகுதி. நாம் இங்கே கன்னங்கள் என்ற பதத்தை தியானிப்போமாக. முகத்திற்கு அழகு கொடுப்பது கன்னங்கள். நமது அந்தரங்க ஆவிக்குரிய வாழ்க்கை கிறிஸ்துவிற்குள் மறைந்து இருக்கிறது. கன்னங்கள் எப்படி ஒரு பெண்ணிற்கு அழகு கொடுக்கிறதோ, நமது ஆவிக்குரிய கன்னங்கள், நமது உள்ளான பரிசுத்த அலங்காரத்தை வெளிப்படுத்துகிறது. கிறிஸ்தவ வாழ்க்கையில் பரிசுத்தம் இல்லாவிட்டால், நமது ஆவிக்குரிய கன்னங்கள் முக்காட்டின் நடுவே அழகாக இருக்கவே இருக்காது!

Next.... என் உத்தமியோ ஒருத்தி