மணவாளியின் குரல்

Previous......மணவாளியின் திராட்சத்தோட்டம்

மணவாளியின் குரல்

சாலொமோன் இப்போது சூலமேத்தியாளின் காதில் இரகசியம் பேசுகிறான்: "தோட்டங்களில் வாசம்பண்ணுகிறவளே! தோழர் உன் சத்தத்தைக் கேட்கிறார்கள்; நானும் அதைக் கேட்கட்டும்" (உன்னதப்பாட்டு 8:13).மணவாட்டியே நீ உன்னுடைய தோட்டத்தில் மாத்திரம் அல்ல, மற்ற தேவப்பிள்ளைகளின் தோட்டங்களிலும் வாசம் பண்ணவேண்டும். அதாவது மற்ற தேவப்பிள்ளைகளின் தோட்டங்களிற்குப் போய் அவர்களுக்கு உதவி செய்யவேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பு நான் அநேக தேவ ஊழியர்களுக்கு website உண்டாக்கி உதவினேன். இன்று நாம் ஒரு ஊழியரின் பத்திரிகையோ, online ஊழியங்களையோ பார்ப்போமானால், அந்த ஊழியர் தனது சொந்த தேவைகளை மாத்திரம் குறிப்பிட்டு நம்மை ஜெபிக்கவோ, பண உதவி செய்யவோ வேண்டுகிறார். மற்ற ஊழியங்களைக் குறித்த அக்கறையோ கிடையாது. இதேபோல சபைகளிலும் தங்களின் சபைகளின் தேவைகளுக்காகவே போதகர்கள் ஜெபிக்க சபை மக்களை வழி நடத்துகிறார்கள். இது ஒரு சுயநலத்தையே காட்டுகிறது.

உன் தோழர் உன் சத்தத்தைக் கேட்கவேண்டும். கிறிஸ்துவின் சரீரமாகிய சபையிலுள்ள உலகத்திலுள்ள எல்லா தேவப்பிள்ளைகளும் உன் தோழரே! அவர்கள் உன் ஜெப விண்ணப்பத்தின் குரலையும், உனது தீர்க்கதரிசன குரலையும் கேட்கவேண்டும். இன்று நீ அந்நிய நாடுகளுக்குப் போகாமலே Youtube, online ஊழியங்களின் மூலம் உன் குரலை கேட்கப்பண்ணலாம்.

கிறிஸ்துவின் ஒரே சரீரமாகிய சபையிலுள்ள யாரும் உன் குரலை கண்டிப்பாக கேட்பார்கள். ஏனென்றால் அவர்களும் நீயும் அந்த ஒரே சரீரத்தை சேர்ந்தவர்கள். நீ அவர்களுக்கு உண்மையான தீர்க்கதரிசன வார்த்தைகளை எச்சரிப்போடு கொடுக்கும்போது, அவர்கள் கேட்கும்படி கிறிஸ்து அவர்களின் மனக்கண்களைத் திறந்து கேட்கப்பண்ணுகிறார். உன் தீர்க்கதரிசன குரலை கிறிஸ்துவும் கேட்டு அவற்றை அங்கீகரிக்கிறார். கிறிஸ்து அங்கீகரிக்காத ஒரு செய்தியும் நிலைத்துநிற்காது.

மணவாளனாகிய கிறிஸ்து நீ சபைகளுக்குக் கொடுக்கும் உன் தீர்க்கதரிசன குரலை ஆவலுடன் கேட்கிறார்.

Next..... கந்தவர்க்கங்களின் மலைகள்