கண்கள் புறாக்கண்கள்

Previous.....மருதோன்றிப் பூங்கொத்து

கண்கள் புறாக்கண்கள்

மணவாட்டி தான் கறுப்பாயிருக்கிறேன் என்று தன்னை இகழ்ச்சியாக கருதும்போது, மணவாளன் அவளை நோக்கி, "என் பிரியமே! நீ ரூபவதி; நீ ரூபவதி; உன் கண்கள் புறாக்கண்கள்" என்று பாடுகிறார் (உன்னதப்பாட்டு 1:15). "நீ ரூபவதி" என்று அநேக இடங்களில் இந்த புத்தகத்தில் காணலாம். நீங்கள் உங்களுடைய பார்வையில் களங்கம் உள்ளவர்களாக இருந்தாலும் யேசுக்கிறிஸ்துவின் பார்வையில் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். இதுதான் உங்களைப்பற்றி கிறிஸ்துவின் சாட்சி! "நீ ரூபவதி"! கிறிஸ்து தனது கண்ணாடியை உங்களின் முன்னால் பிடித்து உங்களது சாயலை காணும்படி செய்கிறார். அவரின் கண்ணாடி உங்களின் கண்ணாடியைவிட மாறுபட்டது. அவரின் தனிப்பட்ட கண்ணாடியைப் பிடித்து உங்களுடைய காதுகளில் இரகசியம் பேசுகிறார், " என் பிரியமே! நீ ரூபவதி" என்று!

புறா மென்மையானதும் அப்பாவியானதும் ஒரு பறவை! அது இலகுவாக வேடனின் கண்ணியில் அல்லது கழுகின் வாயில் விழுந்துவிடும். அதன் கண்களில் வஞ்சகம் காணப்படுவதில்லை. கிறிஸ்து, உங்களின் அப்பாவிதனத்தையும், மென்மையான குணத்தைக்குறித்தும் சாட்சி கூறமுடியுமா?

Next..... ரூபமுள்ளவர்