#KollywoodStreet Xclusive Indian Cinema Updates 24×7 News, Photo's, Video's, & Many More | All Category Movie's Review Site ✍🏻 Operates As An Online
மில்லியன் ஸ்டுடியோ சார்பில் எம்.எஸ்.மன்சூர் தயாரித்திருக்கும் இப்படத்தில் சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள். பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ராஜீவ் மேனன் முக்கிய வில்லனாக நடித்திருக்கிறார். இவர்களுடன் தன்யா ஹோப், மாயா, மைம் கோபி, கனிகா, யாஷிகா ஆனந்த், ராஜீவ் பிள்ளை, கஜராஜ், வேலு பிரபாகரன், பரத்வாஜ் ரங்கநாதன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
. சத்யராஜ் சார் மற்றும் வசந்த் ரவி ஆகியோர் இடம் பெரும் சுமார் இரண்டரை நிமிடக் காட்சிகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் படமாக்கி உள்ளார்கள். .
. ஹாலிவுட்டில் மார்வெல் மற்றும் டிசி கதாபாத்திரங்கள் போல் தமிழிலும் உருவாக்கி, அதற்கான ஒரு கதைக்களத்தை உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் சத்யராஜ் சார் சூப்பர் ஹுயுமன் வேடத்தில் நடித்துள்ளார். அவர் இயற்கையான சூப்பர் ஹுயுமன் கிடையாது, செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு சூப்பர் ஹுயுமன். அவர் எப்படி உருவானார்? அவரை உருவாக்கியது யார்? என்பதை இந்தப் படம். இப்படி சூப்பர் பவர் கொண்ட கதாபாத்திரங்களை மார்வெல் மற்றும் டிசி அறிமுகப்படுத்தியிருந்தாலும், அவை அவர்களுடைய கலாச்சாரத்தின் பின்னணியைக் கொண்டவைகளாக இருக்கின்றன. நான் நம்முடைய கலாச்சாரத்திற்கு ஏற்ப சூப்பர் ஹூயுமன் கதாபாத்திரத்தை உருவாக்கும் நோக்கத்தில் தான் சத்யராஜ் சார் கதாபாத்திரத்தை வடிவமைத்துள்ளனர்.
அவர் தான் வெப்பன். அதாவது எந்த ஆயுதத்தாலும் அழிக்க முடியாத மனித ஆயுதம். அவர் அப்படி மாறியது எப்படி? என்ற ரீதியில் கதை பயணிக்கும்.
இந்தப்படத்தில், வசந்த் ரவி யுடியுப் சேனல் நடத்துபவராக வருகிறார். செயற்கையான சூப்பர் ஹூயுமன்களை தேடும் அவர், சத்யராஜையும் தேடுகிறார், அவரைப் போல் மேலும் சிலர் சத்யராஜை தேடுகிறார்கள், அது ஏன்? என்பது தான் கதை.
சூப்பர் ஹூயுமன் கதாபாத்திரத்தை வைத்துக்கொண்டு ஒரு படம் எடுக்க மிகப்பெரிய செலவு ஆகும் என்பது தெரியும், ஆனால் அந்த சூப்பர் ஹூயுமன் எப்படி உருவானார் எனச் சொல்வதற்கு பெரிய செலவு ஆகாது. அதைத் தான் இந்தப் படத்தில் நாங்கள் செய்துள்ளார்கள். இதில், சத்யராஜ் சாருக்கு எப்படி சக்தி கிடைத்தது என்பதையும், அவரைத் தேடும் குழுவினர் பற்றியும் . முதல் பாகமான இந்தப் படம் இதில் இருக்கும் கதாபாத்திரங்களைக் கொண்டு அடுத்தடுத்து கதைகள் நகர்கிறது..... வெப்பன் திரையரங்குகளில் தாக்கும்