#KollywoodStreet Xclusive Indian Cinema Updates 24×7 News, Photo's, Video's, & Many More | All Category Movie's Review Site ✍🏻 Operates As An Online
மகேஷ் ராஜேந்திரன் எழுதி, இயக்கி, தினேஷ் ராஜ் தயாரித்துள்ள லவ் ஓ லவ் படத்தை Zinema Media & Entertainment நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. படத்திற்கு ภ. . முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். Wayne Pavey, Pradeep PJ, FOXn இணைந்து இசையமைத்துள்ளனர். என். ภ. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ள நிலையில், சண்டைக் காட்சிகளை அபிஷேக் ஸ்ரீனிவாஸ் வடிவமைத்துள்ளார். பவிஷ், நாக துர்கா, செல்வராகவன், கே. எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் திரையுலக பிரபலங்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும்
இப்படத்தின் கலைஞர்கள் கலந்து கொண்டு பேசியதாவது:
தயாரிப்பாளர் தினேஷ் பேசும்போது,
தனஞ்செயன் சாருடன் சேர்ந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி.
கடந்த 21/2 ஆண்டு காலமாக தூக்கமில்லாமல் ஆத்மார்த்தமாக உழைத்திருக்கிறார். நீண்ட நாட்களாக சரியான நாயகனை தேடி பவேஷ் கிடைத்தார்.
நாயகி தெலுங்கு படத்தில் நடித்திருக்கிறார். யூடியூப்-ல் நடனம் மூலம் பிரபலமானவர்.
இசையமைப்பாளருக்கு இது முதல் படம். ஆனால், பரிமளா & கோ வெளியாகி விட்டது. முதலில்
இப்படத்தின் கதை அனைவருக்கும் நெருக்கமாக இருக்கும். கருத்தசொல்ல கூடிய படமாகவும் அதே சமயம் நகைச்சுவையுடனும் இருக்கும் என்றார்.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும்போது,
சிறிய அரங்கில் பார்ப்பதை விட கமலா போன்ற பெரிய திரையில் பார்க்கும் போது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும்போது,
சிறிய அரங்கில் பார்ப்பதை விட கமலா போன்ற பெரிய திரையில் பார்க்கும் போது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
திங்க் மியூசிக் அவர்களுக்கும் நன்றி. ஒரு படைப்பு என்பது கூட்டு முயற்சி. அதற்கு திங்க் மியூசிக் மிகவும் உறுதுணையாக இருந்தது.
இப்படம் விரைவாக வெளியாக அமேசான் தான் காரணம். அவர்களின் அழுத்தத்தால் ஜூலை 10 அன்று வெளியாக இரவு வேலை நடந்து பகலாக கொண்டிருக்கிறது.
நல்ல திரைப்படங்களை மக்கள் கொண்டாட தவறியதே இல்லை. அதற்கு சிறந்த உதாரணம் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டு கொண்டிருக்கும் நூறு சாமி படம் தான்.
சசி சார் 10 படங்கள் தான் கொடுத்திருக்குறீர்கள், இன்னும் 100 படம் கொடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். நூறு சாமி படம் இந்த வருடத்தின் சிறந்த படமாக பேசுப்படும்.
இந்த படத்திற்கு பிறகு வனிதா பெரிய வலம் வருவார்.
நடிகை நாக துர்கா யூடியூப்-ஐ நிறுத்தி விடுங்கள். சுபராசு சார் பணத்தில் எந்த சமரசமும் இல்லாமல் இந்த படத்தை வெளிய கொண்டு வரோம் என்று முன் பணம் கொடுத்தார்.
ஆரம்ப காலத்தில் தனுஷ் சாரை பார்த்தது போல பவேஷை பார்த்ததும் தோன்றியது. இன்னும் 2 படங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். பெரிய நாயகனாக வருவார். ஆனால் தொடர்ந்து வெற்றி பெற வேண்டுமென்றால் இதே பணிவோடு இருக்க வேண்டும் என்று கொள்கிறேன் என்றார். கேட்டு
தயாரிப்பாளர் தாணு பேசும்போது,
20 கோடி செலவாகும் பட்ஜெட்டை 10 கோடியாக்கும் தனஞ்செயனுடன் கூட்டு வைத்திருக்கிறீர்கள்.
காதல் எப்போதும் மாறாது, அந்த காதலை சிறப்பாக கொடுத்திருக்கிறார்கள். இந்த படம் வெற்றியடைய வாழ்த்துகள் என்றார்.
நடிகர் அஜய் திஷான் பேசும்போது,
லவ் ஓ லவ் ட்ரைலர் வந்துருக்கிறது. நன்றாக நன்றாக பவிஷ், நாக துர்கா, நடித்திருக்கிறார்கள். வெற்றி பெற வாழ்த்துகள் என்றார். படம்
இயக்குனர் மகேஷ் பேசும்போது, ராஜேந்திரன்
இங்கு வந்த அனைவருக்கும் நன்றி. 1 1/2 மணி நேரத்தில் வாழ்க்கையை மாற்ற முடியுமென்றால் கடவுளால் தான் முடியும். அந்த வகையில் தனஞ்செயன் சாருக்கும் தினேஷ் சாருக்கும் நன்றி.
கலை இயக்குனர் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார். நாக துர்கா நன்றாக நடித்திருந்தீர்கள். சசி சார் நூறு சாமி என்ற சிறப்பான படைப்பை கொடுத்திருக்கிறார்.
இந்த படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி.
கடவுளுக்கு நன்றி என்றார்.
நடிகை வனிதா விஜயகுமார் பேசும்போது,
நான் சினிமாவை விட்டு சென்ற பிறகும் மீண்டும் என்னை வைத்திருக்கிறார்கள். நடிக்க என்னுடைய கதாபாத்திரம் நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார்கள். எனக்கும் பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறது.
இன்றைய காலத்திற்கு தேவையான தலைப்பு லவ் ஓ லவ். அனைவரும் திரையரங்கம் சென்று பாருங்கள்.