#KollywoodStreet Xclusive Indian Cinema Updates 24×7 News, Photo's, Video's, & Many More | All Category Movie's Review Site ✍🏻 Operates As An Online
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் TR நடிப்பில் , இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'அரசன்' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பிரத்யேக புகைப்படத்தை பதிவிட்டு, சிலம்பரசன் TR சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகி வரும் 'அரசன்' திரைப்படத்தில் சிலம்பரசன்TR, விஜய் சேதுபதி , ஆண்ட்ரியா ஜெர்மியா ,சமுத்திரக்கனி, விக்ராந்த் ,கிஷோர், சைத்ரா ஜே. ஆச்சார் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையில் கிரைம் வித் ஆக்சன் திரில்லராக தயாராகி வரும் இந்தத் திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரித்து வருகிறார்.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது. இதில் சிலம்பரசன் TR கலந்து கொண்டிருக்கிறார். இது தொடர்பான புகைப்படத்தை சிலம்பரசன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.