#KollywoodStreet Xclusive Indian Cinema Updates 24×7 News, Photo's, Video's, & Many More | All Category Movie's Review Site ✍🏻 Operates As An Online
தாய் தந்தையை விபத்தில் இழந்த சிறுவன் தீஹானை அவரது தாத்தா எடுத்து வளர்க்கிறார். திடீரென்று தாத்தாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போக டெல்லியில் குடியரசு தலைவர் ஏற்றும் தேசிய கொடியை நேரில் பார்க்க வேண்டும் என்பதுதான் தனது லட்சியம் என்று கூறிய நிலையில் தாத்தாவின் லட்சியத்தை நிறைவேற்ற சிறுவன் தீஹான் தனியாக டெல்லி புறப்பட்டு செல்கிறான். அவனால் அங்கு சென்றுடைய முடிந்ததா? இதற்கிடையில் அவன் சந்திக்கும் சம்பவங்கள் என்ன? என்பதை ஒரு பயண கதையாக சொல்கிறது ஃப்ளாக்.
ஏதோ ஒரு கிராமத்தில் படம் தொடங்கினாலும் இந்தியா முழுவதுமே இவர்கள் சுற்றுலா கொண்டு செல்ல போகிறார்கள் என்பதை தியேட்டரில் அமர்ந்த தருணத்தில் யூகிக்க முடியவில்லை. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை என்று இந்தியா பற்றி சொல்வார்கள் அல்லவா? அந்த வார்த்தையை கண்முன் திரைப்படமாக எடுத்துக்காட்டியிருக்கிறது இந்த படக் குழு. அதற்கேற்றார்போல கதையும் நாட்டுப்பற்று டச்சுடன் கைகொடுத்திருக்கிறது.
இந்தியா முழுவதும் பறக்கும் மூவர்ண தேசிய கொடி எங்கு தயாரிக்கப்படுகிறது என்பது கூட பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கர்நாடக மாநிலம் ஹூப்ளில் உள்ள பெங்கெரி கிராமத்தில் காதி கிராமதாயோக்கில் தயாரிக்கப்படும் விவரமும் அந்த இடமும் படத்தில் காட்டி இருப்பது பார்க்க வேண்டிய காட்சி.
தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, உத்தரபிரதேசம் மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் என பல்வேறு மாநிலங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. இந்த காட்சிகள் கதையோடுயொட்டி வந்திருப்பது கூடுதல் சிறப்பு.
டெல்லிக்கு போகிறேன் என்று ஷோல்டர் பேக் மாட்டிக்கொண்டு தீஹான் புறப்பட்டதும் இவன் ஏதோ மர்ம கும்பவிடம் சிக்கி கதை வழக்கம்போல் ஒரு சிறுவன் கடத்தல் கதையாகப் போகிறது என்று எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு நதியை போல் திசைகள் மாறி கதை வெவ்வேறு கோணத்தில் செல்வது எதிர்பார்க்காத இன்ப அதிர்ச்சி.
இன்ப அதிர்ச்சிக்கு முக்கிய காரணம் இந்தியாவிலுள்ள பல்வேறு முக்கிய சுற்றுலா தளங்களை இந்த படத்தில் பிரதானமாக காட்டியிருப்பது அனைத்து சிறுவர்களுக்கும் ஒரு இந்திய சுற்றுலா விருந்தாக இருக்கும்.
பாலிவுட்டை சேர்ந்த மிக்கி மக்கி ஜா & அபினவ் கோசாமி, போஜ்புரி சேர்ந்த அனந்த், பெங்காளியைச் சேர்ந்த பப்புஷா என வெவ்வேறு மாநிலத் தலைவர் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக பப்புஷாவுக்கு தமிழில் ஹீரோயினாக நடிக்க நம்மூர் இயக்குனர்கள் கொக்கி போடுவார்கள்.
ஃப்ளாக் படத்தை வைரப்பிரகாஷ் தயாரித்திருக்கிறார்.
ராஜா ரவிவர்மா, பாலசுப்ரமணியம் இணைந்து தேவையான இசை அமைத்திருக்கிறார்கள்.
எஸ் பி பொன் சங்கர் கேமராவை தூக்கிக் கொண்டு இந்தியா முழுவதும் வலம் வந்திருக்கிறார் அத்துடன் அழகோவியமாக தாஜ்மஹால் தொடங்கி திருவள்ளுவர் சிலை, சர்தார் பட்டேல் சிலை வரை கண்களில் பதியும் வகையில் படமாக்கியதற்கு ஒரு பாராட்டு மாலை சூட்டலாம்.
தேச பற்றை வலியுறுத்தி பல்வேறு படங்கள் வந்திருக்கின்றன. அவைகளில் ஹீரோவுக்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கும் ஆனால் நேரடியாகவே மூவர்ண தேசிய கொடியை மையமாக வைத்து ஒரு தேச பக்தி படம் வந்திருக்கிறதென்றால் அது இயக்குனர் எஸ் பி பொன் சங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஃப்ளாக் படமாக தான் இருக்கும். திரையில் ரிலீஸ் செய்வதோடு இந்த படத்தை ஒவ்வொரு பள்ளியிலும் திரையிட்டு காட்டுவது பலன் கொடுக்கும்.