அதோ முகம் - திரை விமர்சனம் - 3.5/5



இளைஞன் மார்ட்டீன், பிரியமான தன் மனைவிக்கு வித்தியாசமான முறையில் பரிசு கொடுத்து இன்ப அதிர்ச்சி (Surprise) தர நினைக்கிறான். அப்படி ஒரு முறை அவன் செய்த முயற்சி சுவாரஸ்யமான தோல்வியில் முடிகிறது. அடுத்ததாக அவளை அவளுக்குத் தெரியாமலேயே கண்காணித்து, சந்தர்ப்பம் பார்த்து ஏதையாவது புதிதாய் செய்து, அவளை இன்ப அதிர்ச்சியில் மிதக்க விட தீர்மானிக்கிறான். அதற்காக அவளது மொபைல் போனில் ஒரு செயலியை பதிவிறக்கம் (App Download) செய்கிறான். அதன்மூலம் அவள் என்ன செய்தாலும், எதை செய்தாலும், எதை பேசினாலும், யாருடன் பேசினாலும் அத்தனை விஷயங்களையும் அவனால் லைவாக பார்க்க, கேட்க முடிகிறது.

அப்படி பார்க்கப் பார்க்க, கேட்கக் கேட்க அவளுடைய பேச்சு, நடவடிக்கை, தான் இல்லாத நேரத்தில் வந்து போகும் நபர் அவளுடன் நடந்துகொள்ளும் விதம், அவள் போகிற இடம், சந்திக்கிற நபர், அவருடன் சேர்ந்து ஒரு கொலைக்கான திட்டமிடுதல் என எல்லாமே விபரீதமாக இருப்பதை அறிந்து கொள்கிறான். இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்தவனுக்கு கிடைப்பதெல்லாம் நிஜமான அதிர்ச்சி…


உண்மையில் அவனுடைய மனைவி யார்? அவள் அப்படியெல்லாம் விவகாரமான விஷயங்களில் ஈடுபட காரணம் என்ன? காரணமானவர்கள் யார்? ஒவ்வொரு கேள்விக்கும் அவன் தேடித் தேடி பதில்களைக் கண்டுபிடிக்கும்போது தூக்கி வாரிப்போடுகிறது அவனுக்கு அதிகமாக, நமக்கு கொஞ்சமாக… இயக்கம் சுனில் தேவ்


மார்ட்டீனாக (நடிகர் அருண் பாண்டியனுடைய சகோதரியின் மகன்) எஸ் பி சித்தார்த். ஒவ்வொரு நிமிடமும் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாமல், யார் நல்லவர் யார் கெட்டவர் என்பது புரியாமல் மனக் குழப்பத்துக்கு ஆளாகி தவிக்கிற உணர்வை முடிந்தவரை முகபாவங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

TwitterFacebookInstagramLink