பைரி விமர்சனம் 4/5.. பட்டய கிளப்பும் புறா பந்தயம்


தமிழ் திரையுலகில் இதுவரை இல்லாத முயற்சியாக அம்மா-மகன் சென்டிமென்டின் பின்னணியில் முழுக்க முழுக்க புறா பந்தயத்தை வைத்து உருவான படம் ‘பைரி’.


நாயகன் சையத் மஜித் ஒரு ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் படுத்து வருகிறார். இவர் மீது முறைப்பெண் சரண்யாவுக்கு காதல்.. ஆனால் தன்னுடன் கூட படிக்கும் மேக்னா மீது காதல் கொள்கிறார். ஆனால் அவரோ இவரை கண்டு கொள்வது இல்லை..


இது ஒரு புறம் இருக்க தன் தாத்தா அப்பாவை போல இவருக்கும் புறா பந்தயத்தின் மீது கொள்ளை ஆசை. இதனை எடுத்து புறா பந்தயத்தில் புறாக்களை பறக்க விட ஆசைப்படுகிறார்.


இதன்படி புறாக்களை வளர்க்கத் தொடங்குகிறார்.. ஆனால் இவர் அம்மாவோ கண்டிப்பானவர்.. இதனை தடுக்க பல வழிகளில் போராடுகிறார்.. ஆனாலும் புறா பந்தயத்தில் தன் நண்பர்களுடன் கலந்து கொள்ள புறா வளர்த்துக் கொண்டிருக்கிறார்.


இந்த சூழ்நிலையில் இவருக்கும் எதிரணிக்கும் ஏற்படும் மோதல் தான் இந்த படத்தின் மீதிக்கதை..


இந்தப் படம் பார்த்துவிட்டு நீங்கள் வரும்போது இவரது பெயர்களை விட இவரது கேரக்டர்கள் பெயர்கள் உங்கள் மனதில் நிச்சயம் நிற்கும்…


சையது மஜீத், சரண்யா ரவிச்சந்திரன், மேக்னா எலன், விஜி சேகர் என இதுவரை நாம் பார்க்காத புது முகங்கள் தான் இந்த படத்தின் அடையாளங்கள்..


கோபக்கார இளைஞனாக லிங்கா கேரக்டரில் வெளுத்துக்கட்டி இருக்கிறார் சையத் மஜித். இவரது முதல் படம் ஆனாலும் தன்னுடைய நடிப்பு முத்திரையை முதல் படத்திலேயே முறையாக கையாண்டிருக்கிறார்.


நிறைய படங்களை சின்ன சின்ன கேரக்டரில் வந்து செல்லும் சரண்யா ரவிச்சந்திரன் இந்த படத்தில் கதையின் நாயகியாகவே மாற்றப்பட்டிருக்கிறார்.. தன்னை கட்டிக்கொள்ள மாமன் மீது செய்யும் சேட்டைகளும் மாமி மீது இவர் காட்டும் அன்பும் ரசிக்க வைக்கிறது.


நாயகனின் தாயாக விஜி சேகர் என்பவர் நடித்திருக்கிறார். இவர் சண்டக்கோழி சிங்கம் 2 என பல படங்களில் நடித்திருந்தாலும் இந்த படத்தில் இவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்படும் இவருக்கு விருது கிடைத்தாலும் ஆச்சரியமில்லை.. ஒரு மகனை கண்டிக்க இவர் செய்யும் எல்லை மீறி செயல்கள் அனைத்தும் வேற லெவல் ரகம்..


அதேபோல தன் தாயிடம் சண்டை இட்டு எகிறும் நாயகன் லிங்காவும் வேற லெவல்.. அதற்கு ஈடாக இவரது நண்பர் கேரக்டரில் இயக்குனர் ஜான் கிலாடி நடித்திருக்கிறார். இவரது கேரக்டரும் இவரது தந்தை கேரக்டரும் நம் மனதில் என்றும் நிற்கும்.


இவர்களுடன் மக்களே மக்களே என்று சொல்லும் ரமேஷும் வெளுத்துக்கட்டி இருக்கிறார். புறா பந்தயத்தில் இரு தரப்பு அணிகளும் மோதிக் கொள்ளும் காட்சிகளில் பக்குவப்பட்டு நடிப்பில் ரமேஷ் ஜொலிக்கிறார்.


சுயம்பூ கேரக்டரில் வில்லன் நடித்திருக்கிறார் வினு.. நாயகனுக்கு சரி நிகராக இவரது கேரக்டர் படைக்கப்பட்டிருக்கிறது.. படத்தின் ஆரம்பத்திலேயே இவரை சமாதானப்படுத்த மத்திய மந்திரிகள் வரை வருகின்றனர். அப்போதே இவரது கேரக்டர் மீது எதிர்பார்ப்பு எகிறி நிற்கிறது..


இவர்களுடன் சுயம்புவின் மச்சான் லிங்காவின் நண்பர்களும் அதிகம் கவனம் பெறுகின்றனர்.. ஆக ஒவ்வொரு கேரக்டரையும் நம் மனதில் நிற்கும் படியாக கையாண்டு இருக்கிறார் இயக்குனர் ஜான் கிலாடி.


டி கே ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக வி துரைராஜ் தயாரிப்பில் ஜான் கிளாடி என்பவர் இயக்கியுள்ளார்.


நாயகன் சையத் மஜீத்தின் நண்பராக ஜான் கிளாடி முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இவரைச் சுற்றிய கதை நகரும் வகையில் திரைக்கதையை அமைத்திருக்கிறார்.


புறா காட்சிகளில் கிட்டத்தட்ட படத்தில் 950 சிஜி ஷாட்கள் இருக்கின்றன..


இந்த பைரிக்கு பக்கபலமாக இருந்திருக்கின்றன இந்த தொழில்நுட்ப கலைஞர்கள்.. இவர்கள் இல்லை என்றால் படம் இல்லை.. வசந்தகுமார் ஒலிப்பதிவில் புறா பந்தயப்பா காட்சிகள் நம்மை அசரடிக்கின்றனர் அதுபோல அருண் ராஜா இசையில் பாடல்களும் சரி, பின்னணி செய்யும் மிரட்டல் ரகம்.. நம்மை சீட்டு நுனியில் உட்கார வைத்து மிரட்டி இருக்கிறார்.

நாம் பல படங்களில் சேவல் சண்டையை மையப்படுத்தி திரைக்கதை அமைப்பதை பார்த்திருக்கிறோம். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் ஆடுகளம்.. இந்தப் படம் புறா பந்தயத்தை வைத்து படமாக்கி இருக்கிறார்கள்.. புறாவில் இத்தனை வகை உண்டா? என்பதை நிரூபிக்கும் வகையில் நாகர்கோயிலில் நடந்த உண்மை சம்பவங்களை படமாக்கி இருக்கிறார் ஜான் கிலாடி.


அதற்கு முக்கியமாக கன்னியாகுமரி நாகர்கோயிலில் உள்ள மக்களையும் நடிக்க வைத்து இன்னும் பல கலைஞர்களை திறமையாக கையாண்டிருக்கிறார்.


தன்னுடைய படைப்புக்காக எந்த ஒரு சமரசமும் இல்லாமல் தான் நினைத்ததை அருமையாக படம் பிடித்து அதை ஒரு விருந்தாக படைத்திருக்கிறார் இயக்குனர்.


புறாக்களுக்கு எதிரியான பைரி என்பதே இந்தப் படத்தின் தலைப்பாக வைத்து ஒரு புது முயற்சியை எடுத்து தமிழ் சினிமாவில் தடம் பதிக்க போகிறார் இந்த புதுமுக இயக்குனர்.


சின்ன பட்ஜெட் படங்கள் என்றாலும் அதையும் பார்த்து அதை முறையாக தன் வெற்றி வரிசை பட்டியலில் இந்த பைரியை இணைக்க தயாராகிவிட்டார் சக்திவேல் ஃபிலிம் பேக்டரி சக்திவேலன். அவர் அடித்து சொன்னதைப் போல இந்த பைரி நிச்சயம் தமிழ் சினிமாவில் பட்டைய கிளப்பும்