#KollywoodStreet Xclusive Indian Cinema Updates 24×7 News, Photo's, Video's, & Many More | All Category Movie's Review Site ✍🏻 Operates As An Online
விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக இருந்து இயக்குநராக மாறியவர் எம்.ராஜேஷ் அவரது முதல் படமான சிவா மனசுல சக்தி படம் பெரும் வெற்றி பெற்றது. அதனையடுத்து அவர் இயக்கிய பாஸ் (எ) பாஸ்கரன படம் அதிரி புதிரி ஹிட். இடையில் அவருக்கு சறுக்கல் வர மிகப்பெரிய வீரியத்தோடு பிரதர் படத்தை இயக்கியிருக்கிறார். ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா உள்ளிட்டோர் படத்தில் நடித்திருக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையைமைத்திருக்கிறார்
2024ன் பாசமலர்: பொதுவாக மனிதர்கள் கூட்டம் தனிமையாக இருக்காது. வேண்டுமானால் வீம்புக்கு தான் தனிமையாக இருக்கிறேன் என சொல்லிக்கொள்ளலாம். அதிலும் அக்கா, தம்பி உறவு என்பது உன்னதமானது. அந்த உன்னத உறவை தொட்டிருக்கிறார் ராஜேஷ். அந்த உறவை தொட்டதற்காகவே அவருக்கு ஒரு கட்டிப்பிடி வைத்தியம் கொடுக்கலாம். இன்னும் சொல்லப்போனால் 2024ல் பாசமலரை கொண்டு வந்திருக்கிறார். படத்தின் ப்ளஸ்: ராஜேஷ் இயக்கம் என்றாலே அதில் நகைச்சுவை எப்போது இழைந்தோடும், அதை பிரதரில் எம்.ராஜேஷ் செய்திருக்கிறார். காமெடி மட்டுமின்றி ராஜேஷின் இன்னொரு ப்ளஸ் எமோஷன். உறவுகளுக்குள் நடக்கும் உளவியல் சிக்கலை போகிற போக்கில் தூவிவிட்டு செல்பவர். அதை வெகு இயல்பாக செய்யும் இயக்குநர்களில் ராஜேஷ் முக்கியம். அக்கா, தம்பி உறவை வைத்து தன்னால் இப்படியும் ஒரு ஜானரில் கொடுக்க முடியும் என்பதை அவர் நிரூபித்திருக்கிறார். .
மிக முக்கியமாக ஜெயம் ரவி. இந்தக் கதைக்கு தன்னால் என்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் தாண்டி செய்திருக்கிறார். தன் அப்பாவிடம், அக்காவிடம், மாமாவிடம் அவர் பேசும்போது இப்படி ஒரு தம்பியாக அக்காவிடம் இருக்க வேண்டும் என உணர வைத்து கலங்க வைக்கிறார். உங்களுக்கு இனி ஜெயமதான் ரவி வாழ்த்துகள். அடுத்ததாக பூமிகா. ரோஜா கூட்டம், பத்ரி என நமது மனதை கவர்ந்தவர் பிரதரில் அக்காவாக நம் மனதை அணைக்கிறார். வெல்கம் பேக் பூமிகா. அடுத்தடுத்து உங்கள் வீட்டை சுற்றி குணசித்திர கதாபாத்திரங்களுக்கு கூட்டங்கள் மொய்க்க வாய்ப்புகள் இருக்கின்றன. முக்கியமாக தனது தம்பியிடம் பூமிகா ஒரு வசனத்தை பேசும்போது அவர அக்கா மட்டிமில்லாமல் அம்மாவாவகாவும் பிரவாகம் எடுத்திருந்தார்.
...........ஹாரிஸ் ஜெயராஜ்: எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன இப்படி ஒரு ரீ ரெக்கார்டிங்கை கேட்க ஹாரிஸ். எங்கே இருக்கிறீர்கள். மீண்டும் பழைய பன்னீர் செல்வமாக விரைவில் வாருங்கள். ஏனெனில் இப்போதெல்லாம் பின்னணி இசையில் சத்தங்கள் மட்டுமே கேட்கின்றன. இசையை காதுகள் தேடுகின்றன. இடைவேளை காட்சியில் நீங்கள் செய்த RR இந்த காலத்துகான கிளாஸ். ஊட்டியை இவ்வளவு ஃப்ரெஷ்ஷாக, வேறு கோணத்தில் காண்பிக்க முடியும் என்று ஒளிப்பதிவாளர் விவேகானந்த் சந்தோஷம் நிரூபித்திருக்கிறார். ஊட்டியை பார்த்தவர்களிடம் அந்த ஊட்டியை புது விதமாக ஊட்டும் வித்தை அவருக்கு தெரிந்திருக்கிறது.