#KollywoodStreet Xclusive Indian Cinema Updates 24×7 News, Photo's, Video's, & Many More | All Category Movie's Review Site ✍🏻 Operates As An Online
படத்தின் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன் வைப் வாசா என்கிற கேரக்டரில் காதல், காமெடி, எம்மோஷன் காட்சிகளில் வழக்கம் போல் ஸ்கோர் செய்கிறார். அதே போல் வில்லன் கதாப்பாத்திரத்தில் எஸ்.ஜே. சூர்யா பக்கவாக பொருந்தியுள்ளார். ஹீரோயின் கீர்த்தி ஷெட்டி தனக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை நல்லப்படியாக கையாண்டர்,
குறிப்பாக யோகி பாபு, ஷா ரா மற்றும் பிரதீப் ரங்கநாதனின் காமெடி காம்போ ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனின் அப்பாவாக சீமான் தனக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தில் ஓரளவு நல்ல நடிப்பை தந்துள்ளார்.
தொழில்நுட்ப ரீதியாக படம் மிகவும் பிரம்மாண்டமாக உள்ளது. புரொடக்ஷன் வேல்யூ (Production Values) டாப் நாட்ச் ரகம். விஷுவல்கள் ஒவ்வொன்றும் கண்களுக்கு விருந்து படைக்கின்றன. இதுமட்டுமில்லாமல் அனிருத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை, கேமராமேன் ரவி வர்மன் கேமரா வர்க் படத்தின் மிகப்பெரிய பலமாக உள்ளது